Category Archives: செய்திகள்

கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

111009170355_kalmunai_municipal_council
கல்முனை மாநகர சபையின் 2012ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினதும் ஆதரவுடன் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
கல்முனை மாநகர சபை மாதாந்த பொதுக் கூட்டம் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் நேற்று நடைபெற்றது.கல்முனை மாநகர சபை 2012ம் வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானமாக 17கோடி 43 இலட்சத்து 59 ஆயிரத்து 60 ரூபாவும் எதிர்பார்க்கும் செலவாக 17கோடி 43 இலட்சத்து 42 ஆயிரத்து 788 ரூபாவும் என முதல்வரினால் முன் வைக்கப்பட்டு எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினார்.

தலைமைத்துவ பயிற்சிபெறும் முஸ்லிம் பல்கலை மாணவிகளுக்கு பிரத்தியேக தங்குமிடம்: அமைச்சர் எஸ்.பி.

11-01-05--s_b

(மொஹொமட் ஆஸிக்)

பல்கலைகழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னனியுடன் பேசி முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி மடவளை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினரின் ஏற்பாட்டில் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எதிராக சைபர் யுத்தத்தை ஆரம்பித்தது ஈரான்

imagesce
அபூ மஸ்லமா
“சைபர் யுத்தம் என்பது என்னை பொருத்தவரையில் கராஜில் நிற்கும் பெராரி கார் போன்றது. அது சும்மா நிற்கையில் அமைதியானது. களத்தில் வந்து விட்டால் அதன் வேகத்திற்கு இணை கிடையாது. அது போலத்தான் சைபர் யுத்தம் என்பது. அமெரிக்காவை சீண்டிவிட்டுள்ளது ஈரான். இனி நாம் யார் என்பதை சைபர் யுத்தம் மூலமும் அவர்களிற்கு காட்டுவோம்”.   Leon Peneta (இயக்குனர் பென்டகன், முன்னாள் இயக்குனர் சீ.ஐ.ஏ.)
அமெரிக்காவின் உளவு விமானம் Drone . இது ஆளில்லா தாக்குதல் மற்றும் உளவு விமானம். இது கடத்தப்பட்டு ஈரானில் தரையிறக்கப்பட்டது. இங்கு விமானக்கடத்தல்காரர்கள் யாரும் இல்லாமலே விமானம் கடத்தப்பட்டுள்ளது. இது நாம் தெரிந்த அதிசயித்த செய்தி.

நிந்தவூர் பிரதேச சபை ஆளுங் கட்சி உறுப்பினர்கள் இருவர் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பு

SLMC logo 1_CI

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
நிந்தவூர் பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை எதிராக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் இணைப்புச் செயலாளரான எம்.எம்.அன்சார் மற்றும் பிரதேச உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரான எம்.ரி.ஹசன் அலியின் சகோதரும் இணைப்புச் செயலாளருமான எம்.ரி. ஜப்பார் அலி ஆகிய இருவருமே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துனர்.

பேஸ்புக் தொடர்பில் இலங்கையில் புதிய கட்டுப்பாடு!

face_book
பேஸ்புக் உட்பட சமூக வலையமைப்பு இணையத்தளங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவாகளுக்குப் பொருத்தமற்ற விடயங்களை இலங்கையில் பார்வையிட முடியாதபடி சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வரவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். 
இதன் முதற்கட்ட செயற்பாட்டுக்கு என அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.வெகுசனத் தொடர்பு சாதனங்கள், நீதிமன்றம், சுகாதாரத்துறை ஆகியவற்றின் உதவியும் இதற்குக் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேசமட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்

c1(373)

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கிராமப் பிரிவுகளில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், பிரதேச சுகாதார மேம்பாடு,  டெங்கொழிப்பு நடவடிக்கைகள், பிரதேசத்தின் வீதி மற்றும் போக்குவரத்து ஒழுங்கு விதிகள்,  கட்டாக்காளி மாடுகளின் அதிகரிப்பினால் ஏற்படும் விபத்துக்கள், வடிகான் வசதி சீரின்மையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற குறைபாடுகள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 10.2 மில்லியன் டொலர்

seusl

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் குறிப்பிட்டார். 

இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்!

images

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தலைமைப் பதவி உட்பட ஏனைய பிரதான பதவிகளுக்கான வாக்கெடுப்பு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அரபு வசந்த புரட்சிக்கு வயது 1

imageswqa
தென்மேற்கு துனீசிய நகரமான ஸிதி பூஸிதில் நடைபாதை காய்கறி வியாபாரி ஒருவர் சுயமாக தீக்குளித்து தற்கொலைச் செய்த சம்பவத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு மணிநேரமும் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஆனால்,முஹம்மது புவைஸி என்ற சாதாரண அரபு இளைஞரின் மரணம், 2011 ஆம் ஆண்டில் மிகவும் சக்திமிக்க தீவிரமான தொடர் புரட்சிக்கு துவக்கம் குறித்தது.
அரபு வசந்தம் என்றும், மத்தியக் கிழக்கின் புரட்சி என்றும் அழைக்கப்படும் அரசியல், சமூக பூகம்பத்தின் பிறப்பிடமாக ஸிதி பூஸித் மாறியது. புவைஸியின் மரணம் நிகழ்ந்து இன்று ஒரு வருடம் நிறைவுறும் வேளையில் உலகின் பல பகுதிகளிலும் போராட்டத்தின் தீ ஜுவாலைகள் அணையவில்லை.

முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க புதுவழிகள் அவசியம் – சேகு இஸ்ஸதீன்

sq
கேள்வி:- நீண்ட நாள் மெளனத்தைக் கலைய விட்டு முஸ்லிம் அரசியல் பற்றி நீங்கள் விடுத்த அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. இந்தத் திடீர்த் திருப்பத்துக்கு என்ன காரணம்?
 
பதில்: திடீர்த் திருப்பம் என்று பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை.  நிருபர் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு முஸ்லிம் அரசியல் போக்கைப் பற்றி அங்கலாய்த்து அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பற்றிய எனது கருத்தைக் கேட்டார்.
நிருபர் கேட்டார் என்பதனால், முஸ்லிம் அரசியலுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தைக் கெளரவப்படுத்த வேண்டும் என்ற

கல்முனையில் நேற்று இரவு கடையை உடைத்துக் கொள்ளை!

45798526-56e8-4d45-9499-86cd6ab161ca_S_secvpf

கல்முனையில் உள்ள சயான் சுவீட் சென்டர் எனும் வர்த்தக நிலையத்தை நேற்று இரவு இனம்தெரியாத கும்பல் உடைத்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – கல்முனை மாநகர சபைகள் இணைந்து செயற்பட இணக்கம்: மேயர் சிராஸ்

011

கொழும்பு மாநகர சபையும் கல்முனை மாநகர சபையும் இணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதாக கல்முனை மேயர் சிராஸ் மிராசாஹிப் தெரிவித்தார்.

கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிணங்க இரு மாநகரங்களுக்குமிடையில் கல்வி, கலை, கலாசார மற்றும் அரசியல் போன்ற விடயஙகளில் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக மேயர் சிராஸ் மேலும் தெரிவித்தார்.

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸும் இணக்கத்துடன் செயற்பட தீர்மானம்!

nz
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை மீண்டும் இணைக்கும் போது முஸ்லிம்களின் பங்கு மிக முக்கியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் பேச்சுவாத்தை இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சு நடவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைபபிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பாக இச்சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாலமுனை மாவட்ட வைத்தியசாலையின் அவலநிலை!

addalaichenai

பாலமுனை மாவட்ட வைத்தியசாலை மிகவும் பழைமையான ஒரு வைத்தியசாலை. ஆனால், இங்குள்ள நிருவாகிகளோ ஏனோதானோ என்று காணப்படுகின்றனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு துண்டு வழங்கவென பலர் காணப்படுகின்றனர்.

ஆனால் நோயாளிகள் வருகை தந்தால் அவர்களால் விரைவாக துண்டுகள் வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் அப்படித்தான் என்பார்கள். ஐயா இன்னும் வரவில்லை என்பார்கள். அல்லது ஐயா உள்ளே வேலையாக இருக்கிறார் என்பார்கள். ஒருகாலத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்த இந்த வைத்தியசாலையின் நிருவாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்கின்றி காணப்படுவதற்கு யார் யார் காரணம் என்பது புரியவில்லை.

அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் கொண்டாட்டம்

அமெரிக்க-ராணுவம்-வாபஸ்-ஈராக்கில்-மகிழ்ச்சி-கொண்டாட்டம்-263x170

அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி தெரிவித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ‘அமெரிக்கா தொலைந்து போகட்டும்’ என முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை எரித்த மக்கள் ’நாங்கள் இப்பொழுது சுதந்திரமானவர்கள்’ என்ற பேனரை கையில் பிடித்தவாறு போராட்டத்தை நடத்தினர்.

கல்முனை மேயர் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமனம்!

Untitled-1

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் யாப்பின் படி உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவர் பதவி வழி ரீதியாக கட்சியின் அதியுயர் பீட நியமிக்கப்படுவார். அதனடிப்படையிலேயே கல்முனை மேயர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து இழக்கப்படும் போது அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இழக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

44(4)

கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட இடமாற்றத்தை கண்டித்து நேற்று கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடமாற்றம் செயப்பட்டுள்ள ஆசிரிய,ஆசிரியைகளும் அவர்களுடைய சிறு குழந்தை களும் கலந்து கொண்டு கோஷமிட்டனர். எங்கள் குடும்பங்களை பிரிக்காதே ,தாய் ஒருஇடம், பிள்ளை ஒரு இடம்.  தந்தை ஒரு இடமா, என்பன போன்ற கோசங்களை எழுபியவர்களாக கல்முனை நூலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் வரை எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவர்களாக ஊர்வலமாக சென்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மகஜர் கய்யளிதனர்.

சட்ட முறைமையில் பாரிய மாற்றங்கள் எற்படுத்தப்படும்: அமைச்சர் ஹக்கீம்

rauf1(1)

(றிப்தி அலி)

தற்போது நடைமுறையிலுள்ள சட்ட முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் 8 தொடக்கம் 9 வருடங்கள் எடுக்கும் வழக்கு விசாரணைகளை ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் அடுத்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்ட வரைஞர் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கற்பிட்டியில் 500 ஏக்கர் காணியை கட்டாருக்கு வழங்கியது அரசாங்கம்

600x231xPrime-Minister-of-Qatar-meets-President.jpg.pagespeed.ic.mOO7HIlFOF
கற்பிட்டியில் உள்ள ஐந்து தீவுகளில் உள்ள 500 ஏக்கர் காணியை, இலங்கை அரசு கட்டாருக்கு வழங்கவுள்ளது. இதில் சுற்றுலாக் கிராமமொன்று உருவாக்கப்படவுள்ளது. பல வகையான அபிவிருத்தித் திட்டங்களை இது உள்ளடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வந்துள்ள கட்டார் பிரதமர் ஷெய்க் அஹமத் பின் ஜாஸிம் பின் ஜப்ர் அல்-தானி, நிதியமைச்சர் யூஸுப் ஹுஸைன் கமால் ஆகியோர் அடங்கிய தூதுக் குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோரை பல தடவை சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.