Category Archives: மாநகரம்

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

00999

F.M.பர்ஹான்:

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர கட்டிடங்களை அகற்றுவதற்கு கட்டிடங்களுக்கு சிவப்பு நிறத்தில் அடயாளமிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்.

கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு அங்குரார்ப்பணம்!

58

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு அங்குரார்ப்பணவைபவம் இடம்பெற்றது. இதன்போது அப்பாடசாலையின் சாரணிய வளர்ச்சிக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று – கல்முனை உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் நிதியுதவி வழங்கினார்.

சீடோ சிறி லங்கா நிறுவனத்தினால் ஒருநாள் செயலமர்வு

02

-பி. எம். எம். ஏ. காதர்-

சீடோ சிறி லங்கா நிறுவனத்தினால் மக்கள் ஆட்சி சம்பந்தமான ஒருநாள் செயலமர்வு இளைஞர் யுவதிகளுக்கு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் அண்மையில் (10.06.2012) நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையினால் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்

22

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டிடங்கள் நேற்று முன்தினம் கல்முனை மாநகர சபையினால் அகற்றப்பட்டது.

ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேருக்கு சுகவீனம்; கல்முனை ஐஸ்கிறீம் நிறுவனத்திற்கு வர்த்தக தடை!

kalmunai mc

-எஸ்.அஸ்ரப்கான்-

பாண்டிருப்பில் நேற்று திருமண வீடு ஒன்றில் ஐஸ்கிறீம் உட்கொண்டவர்கள் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து கல்முனையிலுள்ள குறித்த ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையத்தின் வர்த்தக அனுமதிப்பத்திரம் கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மருதமுனை அல்மனார் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டி!

410

-பி.எம்.எம்.ஏ.காதர்-

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பாண்டிருப்பில் ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 சிறுவர்கள் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலையில்

kalmunai

(எஸ்.மாறன்) TM

கல்முனை பாண்டிருப்பில் திருமண நிகழ்வொன்றிலும் பிறந்த தின வைபவமொன்றிலும் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 50 பேர் உடல் உபாதைகளுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக வைத்தியர்கள் போர்க்கொடி

kalmunai amh

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)- TM

அரசியல் தலையீடு மற்றும் செல்வாக்குகளின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவுவதாக கூறப்படும் சீர்கேடுகளுக்கு எதிராக வைத்தியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மாகாண மட்ட கணித வினாடி வினாப்போட்டியில் கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவி முதலிடம்

121

-வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண மட்ட கணித வினாடிவினாப்போட்டியின் தரம் 8இற்கான போட்டியில் கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவி ஞானரெத்தினம் கிருசாகரி முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.

மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்களை வன்மையாக கண்டிக்கிறோம்; கல்முனை விகாராதிபதி

Untitled-2

-எஸ்.அஷ்ரப்கான்-
மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், மனிதநேயமற்ற செயற்பாடுகளை யார் செய்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் எல்லாமதங்களையும் நாம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். என கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு

Untitled-2

சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவராக முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர் அல் ஹாஜ் வை.எம்.ஹனீபாவும் செயலாளராக முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எச். அப்துல் பஸீரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக ஏ.ஆதம்பாவா நியமனம்!

123

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஏ.ஆதம்பாவா இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நற்பிட்டிமுனையில் இளைஞர் வளநிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

1400

-சிஹாப்-
கல்முனை நற்பிட்டிமுனையில் இளைஞர் வளநிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், அரசாங்க ஆயுள்வேத வைத்தியசாலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றது.

கல்முனையில் கௌரவம் பெற்ற மாநகர முத்துக்கள்..!(படங்கள் இணைப்பு)

00001

எஸ்.அஷ்ரப்கான்

கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் ஊக்குவிக்கும் நிதியுதவிகள்

02

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவர் சங்கத்தினால் இவ்வருடம் மாகாண மட்ட தமிழ்த்தின போட்டிக்கு தெரிவான மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 25,000  ரூபா 2012 -05-17அன்றுமுன்னாள் மாணவர் சங்க உபதலைவர் சு.ராகவனால் வழங்கப்பட்டது.

சிறுவர் உரிமைகள் குறித்து கல்முனையில் விசேட கூட்டம்!

km-09

(வி.ரி.சகாதேவராஜா)
சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ.எம்.ஜாபீர் இன்று வெள்ளிக்கிழமை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளை அழைத்து விசேட கூட்டமொன்றை வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடாத்தினார்.

யாழ் ராணுவத்தினர் பயணித்த பஸ் சாய்ந்தமருதில் விபத்து!

001

(சிஹாப்)
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு இராணுவ முகாமை நோக்கி படை வீரர்கள் பயணித்த பஸ் வண்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சாய்ந்தமருதுவில் விபத்துக்குள்ளானது.

மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

hrc-srilanka_CI

(அப்துல் அஸீஸ்)
மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கல்முனை பிரதான வீதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு தின்மக்கழிவகற்றும் இயந்திரங்கள் அன்பளிப்பு!

002

எஸ்.அஷ்ரப்கான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று மஹெந்திரா உழவு இயந்திரங்களை யுனொப்ஸ் நிறுவனம்திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டுக்கென கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச சபை ஆகியவற்றிற்கு வழங்கிவைக்கும் நிகழ்வு அம்பாறை யுனொப்ஸ் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.