Category Archives: மாநகரம்

மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே: அமைச்சர் ரிசாத்

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சபையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் 11 வருட காலம் அபிவிருத்தியின்றி காணப்படும் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தியினை எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி முதல் எமது கட்சி பொறுப்பெடுக்கும் என பிரகடனம் செய்தார்.

கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடி முற்சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாநகர சபை வேட்பாளர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:-

நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதி நிர்மாணம்

ஜப்பானின் ஜெயிக்காத்திட்டத்தின் நிதியொதுக்கிட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி. நீர்ப்பாசனம். வீடமைப்பும் நிர்மாணம் . கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 69   மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதிக்கான அங்குராப்பண நிகழ்வு  வெள்ளிகிழமை காலை  இடம்பெற்றது.
இவ்வீதிக்கான நினைவுப்படிகத்தினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சா ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் திட்டவரைபடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினா் எம்.எல்.ஏ.துல்சான்  மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை ,கல்முனை மாநகர சபை வேட்பாளர்.ஏ.ஜி.நௌசாத் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

முதன்மை வேட்பாளர் நிசாம் காரியப்பரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். தனது கல்முனை இல்லத்தில் விஷேடமாக கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எஸ். பி. மஜீத்,  கே. எம். ஏ. ரஸாக்,  ஏ. எம். ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக
பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருடன் வேட்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கல்முனையில் பல்வேறு நிகழ்வுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11ஆவது ஆண்டு நினைவு தின பல்வேறு நிகழ்வுகள் இன்று வௌ்ளிக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றன.முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முதன்மை வேட்பாளருமான நிஸாங் காரியப்பரின் தலைமையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு தற்போது நிரந்தர வீட்டுத்திட்டத்தில் வாழும் பல குடும்பங்களுக்கு தானம் வாழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இத்தினத்தையொட்டி இன்று மாலை கல்முனை பிரதான வீதியில் தலைவரின் இல்லத்திற்கு முன் நிஸாங்காரியப்பரின் தலைமையில் தலைவரின் ஞாபகார்த்த உரைக் கூட்டமும் இடம்பெற்றது.
நிஸாங்காரியப்பர் எம்.எச்.எம்.அஷ்ரபின் குடும்ப உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அடையாள போராட்டம்.

கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு வைத்திய சேவையினை வழங்கும் போது தனிப்பட்ட சிலரின் அழுத்தம் காரணமாக மக்களுக்கு வைத்தியசாலை உத்தியோஸ்தர்களினாலும் ஊழியர்களினாலும் புரணமான சேவையினை வழங்க முடியாதுள்ளதனை பிரதிபலிக்கும் வகையில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அடையாள போராட்டமொன்று இன்று வைத்தியசாலைக்கு முன் நடைபெற்றது.

கல்முனை மாநகர அபிவிருத்திக்கு உதவ அமெரிக்கா தயார்: தூதுவர் பற்ரீசியா உறுதி

கல்முனை மாநகர சபை மேயர் வேட்பாளரும், ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயளாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களும், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான தேசபந்து ஜனாபா சல்மா ஹம்ஸா அவர்களும்,  10.09.2011 இன்று அமெரிக்கா தூதுவரான Patricia A.Butenis அவர்ளை மட்டக்களப்பில் சந்தித்தனர்.

தனி அலகின் தலைநகர் கல்முனையே: ஹசன் அலி

தனி அலகின் தலைநகர் கல்முனையே. சவால்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் அதனை வென்றெடுக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஸஹிரியன் 90 ” என்ற பெயரில் கல்முனை ஸாஹிராவில் பெருநாள் ஒன்று கூடல்

நோன்பு பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்பில் கல்விபயின்று எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல உயர்பதவிகளை வகிக்கும் வகுப்பு நண்பர்கள் ஒன்றிணைந்து ” ஷஹிரியன் 90 ” என்ற பெயரில்
குடும்ப ஒன்றுகூடல் ஒன்றினை கடந்த சனிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தனர்.

மனித நேயமுள்ள ஆட்சியினை ஏற்படுத்த என்னாலான சகல முயற்சியினையும் மேற்கொள்வேன்.சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்

கல்முனை மாநகரசபையின் ஆட்சியினை மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி மேயராக தெரிவு செய்யப்படும் போது மனித நேயமுள்ள ஆட்சியனை ஏற்படுத்த என்னாலான சகல முயற்சியினையும் மேற்கொள்வேன்.இவ்வாறு கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை பிரதேச ஊடகவியாளர்களின் முன் தனது கருத்தினை தெரிவிக்கையில்,

ஸாஹிறா தேசிய கல்லூரியில் 1990ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்கள் 21 வருடங்களுக்குப்பின் தமது குடும்பங்களோடு ஒன்று சேர்ந்து சந்திக்கும் நிகழ்வு

 

பரஸ்பர நல்லுறவை வளர்க்கும் நோக்கோடு புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் 1990ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்றவர்கள் 21 வருடங்களுக்குப்பின் தமது குடும்பங்களோடு ஒன்று சேர்ந்து சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.