Category Archives: பிராந்தியம்‌

நிந்தவூர் பிரதேச சபை ஆளுங் கட்சி உறுப்பினர்கள் இருவர் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பு

SLMC logo 1_CI

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
நிந்தவூர் பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை எதிராக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் இணைப்புச் செயலாளரான எம்.எம்.அன்சார் மற்றும் பிரதேச உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரான எம்.ரி.ஹசன் அலியின் சகோதரும் இணைப்புச் செயலாளருமான எம்.ரி. ஜப்பார் அலி ஆகிய இருவருமே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 10.2 மில்லியன் டொலர்

seusl

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் குறிப்பிட்டார். 

இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க புதுவழிகள் அவசியம் – சேகு இஸ்ஸதீன்

sq
கேள்வி:- நீண்ட நாள் மெளனத்தைக் கலைய விட்டு முஸ்லிம் அரசியல் பற்றி நீங்கள் விடுத்த அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. இந்தத் திடீர்த் திருப்பத்துக்கு என்ன காரணம்?
 
பதில்: திடீர்த் திருப்பம் என்று பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை.  நிருபர் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு முஸ்லிம் அரசியல் போக்கைப் பற்றி அங்கலாய்த்து அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பற்றிய எனது கருத்தைக் கேட்டார்.
நிருபர் கேட்டார் என்பதனால், முஸ்லிம் அரசியலுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தைக் கெளரவப்படுத்த வேண்டும் என்ற

பாலமுனை மாவட்ட வைத்தியசாலையின் அவலநிலை!

addalaichenai

பாலமுனை மாவட்ட வைத்தியசாலை மிகவும் பழைமையான ஒரு வைத்தியசாலை. ஆனால், இங்குள்ள நிருவாகிகளோ ஏனோதானோ என்று காணப்படுகின்றனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு துண்டு வழங்கவென பலர் காணப்படுகின்றனர்.

ஆனால் நோயாளிகள் வருகை தந்தால் அவர்களால் விரைவாக துண்டுகள் வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் அப்படித்தான் என்பார்கள். ஐயா இன்னும் வரவில்லை என்பார்கள். அல்லது ஐயா உள்ளே வேலையாக இருக்கிறார் என்பார்கள். ஒருகாலத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்த இந்த வைத்தியசாலையின் நிருவாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்கின்றி காணப்படுவதற்கு யார் யார் காரணம் என்பது புரியவில்லை.

காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் சஊதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்

asraf-kabar

சவூதி அரேபியாவில் காத்தான்குடியைச் சேர்ந்து 22 வயதுடைய அப்துல் கப்பார் அஷ்ரப் என்பவருடைய ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 நாட்களுக்கு முன்னர் இவர் சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு சென்றுள்ளார். சாரதி தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றுள்ள இவர் கடந்த இரு நாட்களாக வேலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் இவர் தங்கியிருந்த அறை உடைத்துப் பார்க்கப்பட்டபோதே அவரின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பான முழுவிபரம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென மரணமானவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்ய வேண்டுகோள்

new

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்துச்செய்யுமாறு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் ஜனாதிபதிக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்கும், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் போன்றவற்றுக்கும் அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்களுக்குள்ளும் வலயங்களுக்கு வெளியிலும் வெளிமாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தினால் அதிகமான ஆசிரியர்கள் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலம் மீண்டும் மூடப்படுகிறது!

12124258
மட்டக்களப்பு கல்லடிப் பாலம் திருத்த லேலைக்காக மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை (2011-12-10) இரவு 11.00மணி தொடக்கம் அதிகாலை 04.00மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

சுமார் 70 வருடங்கள் பழமைவாய்ந்த இப்பாலம் ஜனாதிபதியின் துரித அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தற்போது மிக வேகமாக முழுமையாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம் கடந்த நவம்பர் மாதம் புனர்நிர்மான பணிக்காக முதன் முறையாக மூடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டதோடு இரண்டாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை இரவு 11.00மணி தொடக்கம் அதிகாலை 04.00மணிவரை மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறையிலுள்ள பல வைத்தியசாலைகள் மாகாண சுகாதார அமைச்சினால் புறக்கணிப்பு: கே.எம்.ஜவாத்

20035_100189980016243_100000757233204_2318_7990083_n

அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் குற்றஞ்ஞாட்டினார்

கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கான 2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வரவு செலவு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதிகளை பகிர்தல் தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை கல்முனையிலுள்ள பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாயலத்தில் நடைபெற்றுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கண்காட்சி

SEUSL (8)
(எஸ்.எல். மன்சூர்) 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி, பண்பாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய தினத்தில் காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்காட்சிக் கூடங்களுக்கு பாடசாலை மாணவர்களும், பெரியவர்களும் என அணிதிரண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சில திறந்தவெளி கலாசார நிகழ்வுகள் தவிர்ந்தவை மாலையில் ஆரம்பிக்கப்படும் எனக்கூறப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பல இடங்களில் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டிருந்தமை மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குறிப்பாக கலாசார அரும்பொருட்சாலை கூடம் சிறப்பாக இருந்தது. இலங்கையில் வாழ் முஸ்லிம் சமூகத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்த முன்னோர்களது வளமார் முதுசங்களைப் பட்டியலிட்டு பாதுகாத்துக் கொண்டு அவற்றை எதிர்கால சந்ததிகளும் அறிந்து கொள்ளும்படி செய்துள்ளமை மிகவும் வரவேற்கக் கூடியதொரு அம்சமாகும்.

ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

sathaam_protest_02
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளி அழிவு ஏற்பட்டபோது ஈராக் உதவியுடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அப்போது ஈராக் நாட்டின் அதிபராக சதாம் ஹுஸைன் பதவியிலிருந்தமையினால் இக்கிராமம் சதாம் ஹுஸைன் கிராமம் என மக்களால் பெயர் சூட்டப்பட்டது.

ஆசிய மன்றத்தினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்கள் அன்பளிப்பு

images

ஆசிய மன்றத்தினால் அம்பாறை மாவட்டதிலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட அதிகாரி றிசாட் ஷெரீப் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள 62 பாடசாலைகளுக்கும் சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள 68 பாடசாலைகளுக்குமே புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது  என அவர் குறிப்பிட்டார்.

இந்த புத்தகங்கள் மிக விரைவில் உரிய வலய கல்வி பணிப்பாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக றிசாட் ஷெரீப் மேலும் தெரிவித்தார்.

சா்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள்

Aids-1
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)சா்வதேச  எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.

டிசம்பா் – 01 சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்று நோய் பிரிவும் பொத்தவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எயிட்ஸ்

விழிப்புணர்வு ஊர்வலம் விழிப்பு கருத்தரங்கு மற்றும் எயிட்ஸ் தொடர்பான நூல் வெளியீட்டையும் மேற்கொண்டது.

முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் சம்மாந்துறையில் காலமானார்

01

கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏம்.ஏ.அப்துல் மஜீட் இன்று இரவு சம்மாந்துறை அன்வார் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியாசலையில் காலமானார்.

இவர் 1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

புடவை கைத்தொழில் அமைச்சர் மற்றும் அஞ்சல் துறை பிரதியமைச்சர் போன்ற பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

அம்பாறை கரையோரப் பகுதிகளில் பலத்த மழை; வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமம்

01

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று காலை காற்றுடன் பெய்த மழை காரணமாக, வீதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக – அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி போன்ற பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆயினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிடவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நிந்தவுர் ”பெஸ்ட் ஒப் யங்” அமைப்பின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா

sathath 60
நிந்தவுர் ‘ பெஸ்ட் ஒப் யங்’ அமைப்பின் ஏற்பாட்டில் பொலிஸ் சேவையில் வெள்ளி விழாக்காணும் கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரியும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சமூக சேவையாளருமான தேச

மானிய எஸ்.எம்.சதாத் மற்றும் நிந்தவுர் கோட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.