Category Archives: சர்வதேசம்

ஆப்கானிஸ்தானில் 2024ம் ஆண்டு வரை அமெரிக்க படைகள் நிலை கொண்டிருக்கும்

P1-AS190_Afghan_G_20091023173851

2024ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் வகையில், இருநாடுகளும் முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

நரேந்திர மோடிக்கு விசா மறுப்பை நீட்டிக்க அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்!

05lead5

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிப்பதை நீட்டிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி

moldives

மாலைத்தீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றுள்ளார்.

ராணுவ சதிப் புரட்சி தேசத்துரோகம்: முர்ஸி

egyptian-president-mursi-reshuffles-cabinet-1357497037-6856

ராணுவ சதிப்புரட்சி தேசத்துரோகம் என்றும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்றும் எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார்.

தென்ஆப்ரிக்காவில் பஸ் மீது லாரி மோதி 29 பேர் பலி

Tamil-Daily-News_55590021611

தென்ஆப்ரிக்காவில் உள்ள மும்பளங்கா மாகாணத்தில், பிரிடோரியா என்ற இடத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து  பிரிடோரியா நகருக்கு வேலைக்காக வந்து விட்டு பேருந்துகளில் திரும்பி செல்வது வழக்கம்.

உலக சமூக பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது WHO எச்சரிக்கை

Multiracial Hands Making a Circle

உலகில் சமூக அக்கரையோடு சில நலப்பணிகளை செய்துவரும் சமூகபணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருவதாக WHO என்று சொல்லப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

துபாயில் எடையை குறைத்தால் ரூ.6 கோடி பரிசு

over_weight

உடல் எடையை குறைப்பவர்களுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள பரிசாக வழங்கப்படும் என துபாய் நிரவாகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாய் நகராட்சி நிர்வாகம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

‘ஹையான்’ புயலில் 10,000 மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தகவல்

TOPSHOTS-PHILIPPINES-WEATHER-TYPHOON

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ஹையான்’ என்ற புயல் கடந்த 8–ந் தேதி கொடூரமாக தாக்கியது. இந்த புயலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோர நகரமான தக்லோபான் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை இழந்தது அமெரிக்கா..!

unes

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் வெள்ளிக்கிழமை இழந்துள்ளன.

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த ஹையான் சூறாவளி தாக்கியதால் 1200 பேர் பலி

131109012416-tacloban-typhoon-horizontal-gallery

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமரின் இணையதளம் ஊடுருவல்!(காணொளி)

The-government-website-of-Singapores-Prime-Ministers-office-is-hacked-by-Anonymous-AFP

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்செய்ன் லூங்க்கின் இணையதளத்தை இணையக் கடத்தலர்கள் ஊடுருவி செயலிழக்கச் செய்துள்ளனர்.

எகிப்தில் அடுத்த ஆண்டு தேர்தல்!

morsi

எகிப்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று இராணுவ சர்வாதிகார அரசு தெரிவித்துள்ளது.

பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் செய்மதி பூமியை தாக்குமா?

sri_lanka_satillete_ecoastalworld1

காலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கடலில் விழ வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் காஸாவுக்கான வேலைத் திட்டங்களை நிறுத்துகின்றனர்

201311694430566734_20

(தமிழாக்கம்-கிண்ணியா இன்ஸமாம்)

பலஸ்தீன எல்லைக்குள் கட்டிடப் பொருட்களை இறக்குமதி செய்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதன் காரணமாக ஐ.நாவின் காஸாவுக்கான கட்டிடம் அமைக்கும் திட்டம் இடைநிறுத்தப் பட்டுள்ளது.

இம்ரான் கான் எச்சரிக்கை! அமெரிக்கா உடனடியாக ஆளில்லா விமான தாக்குதளை நிறுத்த வேண்டும்

333351_Imran-Khan

ஆளில்லா வேவு விமானங்களைக் கொண்டு நடத்தும் தாக்குதல்களை இந்த மாதத்துடன் நிறுத்தா விட்டால், நேட்டோ படைகளுக்கான முக்கிய வழங்கல் பாதைகளை தடுக்கப் போவதாக எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

மியான்மரில் படகு கவிழ்ந்து 62 பேர் நீரில் மூழ்கி பலி

Evening-Tamil-News-Paper_3012812138

மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 62 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மியான்மரிலிருந்து 70 பேருடன் ஒரு படகு வங்காள தேசத்துக்கு வங்காள விரிகுடா கடலில் சென்றது.

ஆசிய ஐரோப்பா கண்டத்தையும் இணைக்கும் ரயில் சுரங்க பாதை துருக்கி திறந்துள்ளது

Tamil_News_large_84180220131104054700

ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் விதமாக, துருக்கியில், கடலுக்கடியில் செல்லும், ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.

மக்களைக் கொல்வதில் நான் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன்: ஒபாமா

images

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படையினர் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் குறித்து தனது உதவியாளர்களிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாககூறப்படும் ஒரு கருத்து குறித்து புதிதாக வெளியாகியுள்ள ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சஹாரா பாலைவனத்தில் 92 பேர் இறந்த சம்பவம்: அகதிகள் முகாமை மூட நைகர் அரசு உத்தரவு

azawad_chgagga8

மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் வறுமையில் வாடும் மக்கள் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக எண்ணி தங்கள் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர்.