Category Archives: சர்வதேசம்

அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் கொண்டாட்டம்

அமெரிக்க-ராணுவம்-வாபஸ்-ஈராக்கில்-மகிழ்ச்சி-கொண்டாட்டம்-263x170

அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி தெரிவித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ‘அமெரிக்கா தொலைந்து போகட்டும்’ என முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை எரித்த மக்கள் ’நாங்கள் இப்பொழுது சுதந்திரமானவர்கள்’ என்ற பேனரை கையில் பிடித்தவாறு போராட்டத்தை நடத்தினர்.

பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்

headshaving

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள சால்மியா எனும் பகுதியில் உள்ள ஒரு பிஸியான ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த இளம் பெண்களை 9 வாலிபர்கள் அநாகரீகமான சொற்களை கூறி கிண்டல் செய்தனர்.

இதை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியினர் 9 வாலிபர்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட 9 வாலிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் 9 வாலிபர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. பின் பொதுமக்கள் முன்னிலையில் இனி இத்தகைய தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டனர்.

அமெரிக்கா தாக்கினால் திருப்பித் தாக்குவோம் பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி

13736_NewsPGMPHov

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் இராணுவ நிலைகளைத் தாக்கினால், திருப்பித் தாக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அரபு லீக்

untitledaa
சிரியா மீது அராப்லீக் அமைப்பு பொருளாதார தடை விதித்தது. கடந்த 8 மாதங்களாக சிரியாவில் அதிபர் பஷர்அல்அசாத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. எனினும் சிரியா அதிபர் பதவிவிலக மறுத்து வருகிறார். ராணுவம்- பொதுமக்களிடையே நடந்து வரும் மோதலில் பலர் பலியாகி வருகிவ்ர்,
சிரியா வன்முறையால் இதுவரை 3,500 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச சமூகம் வலியுறுத்தியும் அதிபர் பிடிவாதம காண்பிக்கிறார். இந்நிலையில் அராப் லீக் அமைப்பின் அவசரக்கூட்டம் எகிப்தின் கெய்ரோவில் கூடியது. , பொதுச்செயலர் துவக்கி வைத்து பேசினார். பின்னர் உறுப்புநாடான கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகஹமத்பின்-ஜாஸிம் கூறுகையில், 

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு உளவாளிகள் ஈரானில் கைது

300ciasmossad

அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.ஐ.ஏ. (அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு) மற்றும் இஸ்ரேலின் மொஸாட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை புலனாய்வு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

பலஸ்தீன் தனிநாட்டுக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை – பிரிட்டன் அறிவிப்பு

w5
பலஸ்தீன் முழு அங்கத்துவத்திற்கான ஐ. நா. பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பை தவிர்த்துக் கொள்ளப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. பலஸ்தீன – இஸ்ரேல் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்குடன் பாதுகாப்புச் சபையில் வாக்களிக்காமல் இருக்க பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளதாக அதன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
“பலஸ்தீன விண்ணப்பத்திற்கு எதிராக நாம் வாக்களிக்கப்போவதில்லை. பலஸ்தீன தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று அதற்கு ஆதரவாகவும் நாம் வாக்களிக்கப்போவதில்லை” என்று வில்லியம் ஹக் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

லிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டார்!

New Picture (1)

நீண்ட நாள் போருக்கு பின் லிபியாவில் உள்ள சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி கடாபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். புரட்சிக்காரர்கள் கடாபியின் ஆட்களை சிறைபிடிக்கத் துவங்கினர். இதையடுத்து கடாபி குடும்பத்தார் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். 

ஹமாஸின் தந்திரேபாயம் – காஸாவில் கொண்டாட்டம்

untitled
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான ஒப்பந்தப்படி, ஹமாஸ் பிரிவினர் பிடியில் இருந்த இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித், 25, விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, பாலஸ்தீன கைதிகள் நூற்றுக்கணக்கானோர், இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். காசா மற்றும் ரமல்லா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் திரண்டு நின்று உற்சாகமாக அவர்களை வரவேற்றனர்.
நிபந்தனை: கடந்த 2006ல் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் பிரிவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் பிடித்துச் செல்லப்பட்டார். அவரை விடுவிப்பதற்காக இஸ்ரேல், ஹமாசுடன் பேச்சு நடத்தியது. அவருக்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள, 1,027 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என, ஹமாஸ் நிபந்தனை விதித்தது….

தனிநாடு கோரிய மஹ்மூத் அப்பாஸிற்கு பெரும் வரவேற்பு

 hbuyஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தினை ஐ.நா.வின் உறுப்பு நாடாக அங்கீகரிக்குமாறு கோரும் பிரேரணையை மஹ்மூத் அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார்.
யூதக் குடியேற்றங்களை இஸ்ரேல் நிறுத்தாத வரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் கூறியுள்ளார். 1967 ஆண்டுக்கு முன்னரான பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க பாதுகாப்பு பேரவை ஆதரவு வழங்க வேண்டுமென நியூயோக்கில் வைத்து அவர் வலியுறுத்தியிருந்தார். 

ஒஸாமா மனைவி, பிள்ளைகளை மீட்க தலிபான்கள் அதிரடி திட்டம்

 

அல்கொய்தா தலைவர் பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் வைத்து அமெரிக்காவின் “நேவிசீல்” சிறப்பு ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடலை அமெரிக்க ராணுவ வீரர்கள் தூக்கி சென்றனர். பின்லேடன் கொல்லப்பட்ட அந்த வீட்டில் அவரது 2 மனைவிகள் மற்றும் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். அவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. தற்போது அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லிபியா: கதாபியின் மனைவி, மக்கள் அல்ஜிரியாவில்! கதாபி எங்கே?

லிபிய அதிபர் முஅம்மர் கதாபியின் மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) அல்ஜீரியா வந்தடைந்துள்ளதாக அல்ஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளத

“கதாபியின் மனைவி ஸஃபியா, அவரின் மகள் ஆயிஷா, மகன்கள் ஹன்னிபால், முஹம்மத், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் அல்ஜீரியாவுக்குள் காலை 8.45 மணிக்கு (0745 GMT) நுழைந்தார்கள்.