Category Archives: தேசியம்

முஸ்லிம்களும், பத்திரிகைகளும்

imagesmm
அப்துல்லாஹ்
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பெரிய அளவில் எடுபடாமல் அடங்கிப் போவதற்கு பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் காரணமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட ஊடகங்களை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு முஸ்லிம்களால் நடத்தப்படும் ஊடகங்களை எடுத்துக் கொண்டால் அவை மிக மோசமான கொள்கையுடையனவாக காணப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 21வது கறிய ஒக்டோபா அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் 30ஆம் திகதி வெளியான நவமணி பத்திரிகையில் முன்பக்கத்தில் இது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அஹமது நிஜாத்துக்கு 55 வயது என்றும் துமிந்த சில்வாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை போன்ற செய்திகளை வெளியிட்டு வடக்கு முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்துக்கு சாவுமணி அடித்துள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் சுற்றுப் பயணம் தோல்வியில் ?

canada301011_02

அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவுக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து மேற்கொள்ளப்ட்ட முயற்சியும் தோல்வி கண்டுள்ளது.

அதேபோன்று அமெரிக்காவின் வெளிநாட்டு செயலர் கிலாரி கிளிங்டனை சந்திக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியை சந்த்திருந்தது. எனினும் அமெரிக்காவின் வெளிவிவகார அதிகாரிகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான லிங்க் பாஸ்கோவ் என்பவரையும் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவர்களுடன் உரையாடிய கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.

மனம் திறந்த பரீட்சை ஆணையாளர் (வாசிக்கத் தவறாதீர்கள்)

Anura-Edirisinghe[1]

எமது தற்போதைய பாடத்திட்டம், பரீட்சை முறை என்பனவற்றை மாற்றவேண்டுமெனத் தெரிவிக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க, இக்கல்விமுறையால் மாணவ சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நிலைக்கு நாம் மாற்றிவருகிறோம் என்றார்.

கண்டி மகளிர் கல்லூரியின் 13 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் பேசுகையில்,
நான் பரீட்சை ஆணையாளராக இருக்கிறேன். எனவே பரீட்சை முறை பற்றி நான் விமர்சிப்பதை யாரும் எதிர்க்க முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.

நபம்பர் 7ம் திகதி பொது விடுமுறை நாள்

4-hajj-festival

‘ஈதுல் அல்ஹா’ ஹஜ் பெருநாள் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜம்இயதுல் உலமா அறிவித்து அதை அடுத்து அன்றைய தினத்தை-7ஆம் திகதி திங்கட்கிழமை- பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹெல உறுமய-முஸ்லிம் கவுன்சில் இணைந்து சமூகங்கள் மத்தியில் நல்லினக்க கலந்துரையாடல்

010611085517clipart_board_meeting
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது.
கொழும்பில் ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்

23 உள்ளூராட்சி சபைகளுக்கான வெளிவர தொடங்கியுள்ள. இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை – முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைக்குமான

உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளை இங்கு பார்க்கவும்

கொழும்பு, கல்முனை அடுத்த மேயர் யார் – முஸ்லிம்களிடையே பரபரப்பு

கொழும்பு மற்றும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் மேயராக வாய்ப்பிருக்கும் நிலையில் அடுத்த மேயர் யார் என்ற பரபரப்பு நாட்டு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.

கல்முனையில் அநேகமாக முஸ்லிம் மேயர் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்ம்மில் அடுத்த மேயராக வருவாரென்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் காத்திருப்பதாக மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை 8 ஆம் திகதி காலை 7  மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைகின்றது

23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. தேர்தல் தொடர்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், கட்அவுட் அனைத்தையும் இன்று நள்ளிரவுடன் அகற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இன்று தமது இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன. 17 மாநகர சபை, ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடவென 160 அரசியல் கட்சிகளும் 104 சுயேற்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3813 வேட்பாளர்களும் 2675 சுயேற்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 6488 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அரசே விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு கொடு – த.வி.கூ. தீர்மானம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு யாழ்ப்பாணம், நல்லூர் பரமேஸ்வரி மண்டபத்தில் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தம் வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமிய மக்கள் அவர்களின் வீடுகளில் மீள்குடியேற்றப்படவில்லை. தம் உடைமைகள் அனைத்தையும் கைவிட்டு சொற்ப பணத்துடனே சென்றனர். அவர்களுக்கு முறைப்படி நஷ்டஈடு கொடுத்து அரசே வீடுகளை அமைத்து கொடுக்க வேண்டும்.

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அளவ்வையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 25 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில், 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவளை இந்த விபத்து குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலும் பொல்காவையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலும் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலுமே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது.

போராளிகளே புறப்படுங்கள்! (வீடியோ இணைப்பு)

எச்.எம்.அஷ்ரப்

போராளிகளே புறப்படுங்கள்!
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது!அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது!உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!

புலமைப் பரிசில் பெறுபேறுகள் www.doenets.lk பார்வையிடலாம்

 

2011ம் ஆண்டின் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிறது. பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இதனை நண்பகல் 12 மணிமுதல் www.doenets.lk என்ற தமது இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ஊழல், அநியாயம், லஞ்சம், பாதாளம் அதிகரிப்பு – ஒப்புக்கொள்கிறார் மூத்த அமைச்சர்

நாட்டை இன்று பாதாள உலகக் குழு ஆளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க சிரேஸ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் பாராளுமன்றிலிருந்து கீழ் மட்டம் வரையில் ஊழல்கள் அதிகரித்துச் செல்வதாக அமைச்சர் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும்

சாதாரணதர பரீட்சையில் மாற்றம் – கல்வியமைச்சு தீர்மானம்

கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரத்தில் 1977 ஆம் ஆண்டு கல்வித்திட்ட முறைப்படி ஐந்து பிரிவுகளாக, அமுல்ப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய ஐந்து துறைகளாக மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கை நாளை

நாடு முழுவதிலுமுள்ள 52 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் நாளை 6ம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி எமது கலசம்.கொம் இற்கு வழங்கிய விசேட செவ்வியின் போது குறிப்பிட்டார்.

தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 29ம், 30ம் திகதிகளில்

மீதமுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்கெடுப்பு செப்டெம்பர் 29 மற்றும் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

மீதமுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒக்டோபர் 8ம் திகதி இடம்பெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.