Category Archives: தேசியம்

கொழும்பில் 50 வருடங்களாக இயங்கி வந்த ரண்முது ஹோட்டல் மூடப்படுகிறது

ranmutu-300x168

கொழும்பு கொள்ளுப்பிடியில் இயங்கி வந்த ரன்முது ஹோட்டல் இம்மாதத்துடன் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 வருடங்களாக ரன்முது ஹோட்டல் இயங்கி வந்தது.

இவ்வருடம் 22,943 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி

University-Grants-Commission-Sri-Lanka-logo

2012 – 2013 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளியின் பிரகாரம் 22,943 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர்.

க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 24 ஆம் திகதிக்குள்

Untitled

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் 9 – 17 வரை விசேட விடுமுறை

Holidays

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் வேண்டுகோள்!

mahinda-rajapaksa_10

நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக பல அமைப்புக்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள விசமப் பிரச்சாரங்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை வேண்டி,

கதிஜா பவுண்டேசன் ஆதரவில் விதவைகளுக்கு மறுமணத் திட்டம்

11

(அஸ்ரப் ஏ.சமத்)

கதிஜா பவுண்டேசன் ஆதரவில் விதவைகள் அல்லது விவாகரத்து பெற்ற 100 முஸ்லிம் பெண்களுக்கு மறுமணம் முடிக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக தெஹிவளையில் இயங்கும் கதிஜா பவுண்டேசன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் தங்கியுள்ள தொழிலாளர்கள் கதி என்ன?

Evening-Tamil-News-Paper_27991449833

சவுதி அரேபியா நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆவணங்களை சரி செய்து கொள்வதற்கான கால கெடு நேற்றுடன் முடிந்தது.இதனால் இலங்கை உள்பட பல நாட்டை சேர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

பண்டாரவளை பஸ் விபத்தில் 11 பேர் பலி: 26 பேருக்கு காயம்

1450945_594155123978224_1809803453_n

பண்டாரவளை – பூணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

53 நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படத்திய மாணவ கலாசார பேரணி!

a

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள 53 நாடுகளின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களுடைய பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

செனல் 4 வீடியோவை அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை அமைச்சர் கெஹெலிய

332065578Kehaliya

இலங்கையை சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே புலி ஆதரவு செனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை போலியான வீடியோக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக போராடத் தயாராகிறது ஜாதிக ஹெல உறுமய

hela urumaya_CI

சர்ச்சைக்குரிய கஸினோ சூதாட்டத்தை ஊக்குவிக்கும் சட் டவரைவை திருத்தங்களுடன் மீளக் கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவரும் இந்நிலையில்,

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய விகராதிபதி கைது

20121109-145253

நாட்டில் பரவலாக விகாராதிபதிகளும்,பிக்குகளும் சிறுவர் துஸ்பிரயோகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில்,சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருந்தவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் நிறைவு

images (1)

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. 

தம்புள்ள காளி கோவில் அழிப்புத் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து சிறீதரன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்!

sritharan

தம்புள்ள காளி கோவில் அழிப்புத் தொடர்பாக தமது அதிருப்தியினையும் பாதிக்கப்பட்ட கோவில் மற்றும் அங்கு அகதிகளாக்கப்பட்ட மக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாதாம்; உறுதியளிக்கிறார் கெஹலிய

7455030481664649564keheliya8-L

கொழும்பில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க வரும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான விசாக்கள் வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஊமையாக மாறிய 30 வருட அறிவிப்பாளர்..!

Kamalini

கமலினி செல்வராசன்… என்கிற பெயரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் நேயர்கள் மறந்து இருக்க முடியாது. நாடு அறிந்த அறிவிப்பாளராக மாத்திரம் அன்றி இலக்கியவாதியாக, நடிகையாக பரிணமித்தவர். கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார்.

அங்குலானையில் ரயிலில் மோதி 16 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி

fcff

அங்குலானை சமகி மாவத்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (31) மருதானையில் இருந்து பாணதுறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே, குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு தினமும் ரூ. 40 இலட்சம் வருமானம்

Colombo_katunayeka

(எம். எஸ். பாஹிம்)

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை யினூடாக நாளாந்தம் 40 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியது. நாளாந்தம் 14 ஆயிரத்துக்கும்அதிகமான வாகனங்கள் வீதியில் பயணிப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நெடுஞ்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் நிர்வகிப்பு பிரிவு மேலதிக பணிப்பாளர் கஹடபிடிய கூறினார்.

53 பாடசாலைகள் பங்கேற்கும் கலாசார பேரணி கொழும்பில்

dddd

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதி பலிக்கும் வகையில் 53 பாடசாலைகள் பங்குபற்றும் கலாசார பேரணியொன்று நாளை மறுதினம் கொழும்பில் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.