Category Archives: துரவேந்தியமெடு

துரைவந்தெய்திய மேடு மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினருடன் கல்முனை மேயரும் களத்தில்

mayor 11

கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட துரைவந்தெய்திய மேடு மக்கள் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் அவர்களை படகு மூலம் மீட்பதற்கான படகு சேவையினை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியின்  பணிப்புரைக்கமைய இராணுவத்தின் உயர் அதிகாரிகளாளன பிரிகேடியர் பிரசன்ன, மேஜர் பிரஸாத் உட்பட்ட இராணுவ  குழுவொன்று இன்று கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபை சந்தித்தது.

இச்சந்திப்பானது வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள கிட்டங்கி பாலத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது.