Category Archives: தொழில்நுட்பம்

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் முஸ்லிம் மாணவனின் சாதனை!

iui

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மனைவி ஷமீமா. இவர்களது மகன் முகம்மது ஹம்தான். இவன் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறான். அவன் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக் கலாம் என்பதை கண்டு பிடித்துள்ளான்.

ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்!

steve-jobs-holding-iphone

தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது

புதிய அம்சங்களுடன் கூடிய லினக்ஸ் இயங்குதளம்

linux logo

பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய லினக்ஸ் இயங்குதளம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1. பலவகைத்தன்மை: லினக்ஸ் பற்றிக் குறிப்பிடுகையில் அதனை விரும்பாதவர்கள், அந்த சிஸ்டம் பல வகைகளில் துண்டு துண்டாக உள்ளது என்பார்கள். சொல்லப் போனால், அதுதான் லினக்ஸ் சிஸ்டத்தின் வலுவான சிறப்பு என்று சொல்லலாம்.

விரைவில் இன்டர்நெட் அமைப்பு மாற்றம்(IPv4 இனி IPv6 )

ipv6_ready_logo

இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும்.

நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக(Packet) பிரிக்கப்படும்.இந்த

மடிக்கணணியின் வெப்பத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்

burninglaptop

கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.

புளுடூத் தொழில்நுட்பம்

bluetoothimage
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும் வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும்  செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது.

 

WiFi தொழில்நுட்பம்

wifi-phone-3
Wi-Fi இன் விரிவு”wireless fidelity” மேலும் இது high-frequency wireless local area network (WLAN)
தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone , VoIP phone access போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

 

தகவல் பரிமாற்ற இணையதளம் மெகா அப்லோடை அமெரிக்கா மூடியது

mega-upload-270x170

வாஷிங்டன்:இணையதள உலகில் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற இணையதளங்களில் ஒன்றான மெகா அப்லோடை அமெரிக்க அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இணையதளங்களை கட்டுப்படுத்தும் சட்டம்: அமெரிக்கா வாபஸ்

imagesCA68DPPC-259x170

வாஷிங்டன்:ஆன்லைன் துறையில் பதிப்புரிமை சட்டத்தை மீறுவதை தடுப்பதற்கு சட்டம் இயற்றும் முயற்சியை அமெரிக்க காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது. சட்டத்திற்கு எதிராக இணையதள பயனீட்டாளர்களும், நிறுவனங்களும் நடத்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ் இச்சட்டத்தை இயற்றுவதை காலவரையற்று ஒத்திவைத்துள்ளது.

பேஸ்புக்கை பாதிக்கும் ராம்நிட் வைரஸ்கள்

Ramnit

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனில் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது.

இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கணணிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கணணியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.

பயன்பாட்டுக்கு வந்தது சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர்

Sunway BlueLight MPP

பீஜிங்: சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான சன்வே புளு லைட், தற்போது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முற்றிலும் சீன தயாரிப்பான இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு நொடியில், ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை போடும் வல்லமை கொண்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 3 மாத சோதனை ஓட்டத்திற்குப்பின், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்!

wikipedia-270x170

காப்புரிமை இல்லாமல் திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இணையத்தளங்கள் வெளியிடுவதை எதிர்த்து அமெரிக்க காங்கிரஸ் சட்டம் நிறைவேற்ற உள்ளது.

இதனை எதிர்த்து ஆன்லைன் என்சைக்ளோபீடியா இணையதளமான விக்கிபீடியா அதன் ஆங்கில பதிப்பை
இன்று(புதன்கிழமை) தனது பணியை 24 மணிநேரம் நிறுத்திவைத்துள்ளது.

சந்திரன் சுற்றுப்பாதையில் ‘நாசா’ வின் செயற்கைகோள்கள்!!!

NASA

சந்திரனின் ஈர்ப்பு சக்தியை கண்டறிய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கிரைல்-ஏ”, ‘கிரைல்-பி’என்ற 2 செயற்கைகோள்களை கடந்த வாரம் விண்ணுக்கு  அனுப்பியது. அவை ஒரு வாரத்தில் சந்தி ரனை சென்றடையும் என அனுமானிக்கபட்டுள்ளது,

கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி

Untitled-3 copy

ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.