Category Archives: பாடசாலை செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!

MerNB2Zv

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை www.doenets.lk  எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

7(789)

நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயத்தின் மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கல்முனை வலய பாடசாலை நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் நூல்கள் அன்பளிப்பு

riz1(6)

கல்முனை வலயத்திலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் ஆசிய மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள.

கல்முனை தாருல் அர்கம் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை!

02

(அப்துல் அஸீஸ்)

கல்முனை தாருல் அர்கம் பாலர் பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று கல்முனை தாருல் அர்கம் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி 2012 : முதலிடம் ஹிறா இல்லத்திற்கு…

421212_364812270208226_100000383692580_1156160_882954646_n

BY: THILSHAN NIZAM.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியின் இவ்வாண்டிற்கான இறுதி நிகழ்வுகள் நேற்று மாலை 2 மணியளவில் கல்லூரி மைதானத்தில் வெகுவிமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வு இன்று.

schoolflag

BY: THILSHAN NIZAM.

கல்முனை மாநகரின் பிரதம தேசிய பாடசாலைகளுள் ஒன்றான கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வு இன்று (17.03.2012) மாலை 2 மணியளவில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

01

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம்.எச். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார்.

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

DSCN5388

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியில் டோரதிய இல்லம் சாம்பியனாக வெற்றிபெற்றுள்ளது. கடந்தவாரம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்டீவன் மதியு தலைமையில் நடை பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறபித்தார்.

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மீலாத் விழா!

DSCN2427
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி
மஹிந்தராஜபக்ஷ அவர்களின் அறிவுடன் கூடிய ஒழுக்கமிக்க 
எதிர்காலசந்ததியினரை உருவாக்குதல் என்ற எண்ணக்கருவுக்கு
 அமைய தேசிய,கலாசார அடையாளங்களை பேணிப் பாதுகாப்பதை
அடிப்படையாகக்கொண்டு நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள்
 மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்விகற்கின்றஏனைய
பாடசாலைகளிலும் மீலாதுன் நபி விழாவினைநடாத்துவதற்கு
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா

05

நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்று கிழமை (29 ) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் கல்லூரி பணிப்பாளர் மௌளவில் ஏ.எல்.நாசீர் கனி தலைமையில் நடை பெற்றது.

மாணவர்கள் சிந்தனா ரீதியாக மதம் மாறியுள்ளனர் – யூசுப் முப்தி

aim

உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று அல்குர்ஆன் எவ்விடத்திலும் கல்வியை பிரித்துப்பார்க்கவில்லை என்று அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரிவித்துள்ளார். அநுராதபுர, நாச்சியாந்தீவில் நடைபெற்ற அரபுக் கல்லூரி திறப்பு விழாவொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிநூற்றாண்டு விழா!

5(573)

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கும் பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் அமர்வு நேற்று பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் முதன்நிலை மாணவிகள் கௌரவிப்பு!

mlc al ex 3

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட  க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு நுளம்பு வலைகள்

sahe
 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விடுதி மாணவர்களின் பாவனைக்கென சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீனின்

பணிப்புரைக்கமைய ஒரு தொகுதி நுளம்பு வலைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயிலிடம் இன்று வழங்கி வைத்தனர்.

 

ஏ.எல்.பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் அவசர கவனத்திற்கு..!

Attention

2011 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறு குழறுபடிகள் குறித்து மாணவர்கள் தமக்கு அறியத்தர வேண்டும் என அதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கோரியுள்ளது.

இதுகுறித்து 0112372280 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாக நெருக்கடிகள் தொடர்பில் மாணவர்கள் முறையிட முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவரும் தொழினுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சின் செயலாளர் தாரா விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் 135 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி

schoolflag

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
2011ஆம் ஆண்டுக்கான  க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலுமிருந்து  பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி,  எம்.எச்.எம்.முர்ஸித், உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத், கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட், எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர்.

கல்முனை கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண விழா!

royal 3

கல்முனை பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிறீன்பீல்ட் வீட்டு திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் கே.பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.டீ.ஏ.தௌபீக் மற்றும் பிரதி வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா!

Picture 610

மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் விழா குழு தலைவர் ஏ.ஆர்.ஸாலிஹ் தலைமையில் மருதமுனை அல்-மனார் மண்டபத்தில் நடை பெற்றது.விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேர்க்கப் படுவதையும், பூரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப்  மாணவன் எம்.எம்.அதூப் அகமதுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.

A/L பரீட்சையில் கல்முனை ஸாஹிரா மாணவர்களின் சாதனை (படங்கள் இணைப்பு)2nd update

BEST PERFOMANCE

 

இம்முறை கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  சிறந்த பெறுபேறுகள்  பெற்ற மாணவர்களில் சிலர் விபரம்..