Category Archives: பாடசாலை செய்திகள்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மாவட்டத்தில் உயிரியல்துறையில் முதலிடம்

siyatha-1-150x150

வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல்துறையில் 3ஏ க்களைப்  பெற்று அம்பாறை மாவட்டத்தில்  முதலிடம் பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா  சியாதாவையும் அவரது குடும்பத்தினரையும் 
படங்களில் காணலாம்.

மாவட்ட நிலை அவசியமில்லை – கூறுகிறார் அனுர எதிரசிங்க

Anura-Edirisingha
உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் மாவட்ட நிலை அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்

மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு சேர்த்துக் கொள்ளும்போது மாவட்ட நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாதெனவும்   அவர் கூறியுள்ளார். 

பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளவென சிலர் தமது முன்னைய சுட்டெண்னை இணையத்தில் வழங்குவதால் சரியான பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாது போவதாகவும் அதனை கொண்டு அவர்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவசர பரீட்சை முடிவு வெளியீகளின் நிலை………. மாவட்ட,நாடளாவிய நிலைகளிலேயே குழப்பம்

AL Results

நேற்றுவெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியிலான நிலைகளில் குழப்பங்கள் காணப்படுவதால் அதனை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் மாவட்ட, தேசிய ரீதியிலான நிலைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியிலான நிலைகளிலேயே குழப்பங்கள் காணப்படுவதாகவும் வெட்டுப்புள்ளி மற்றும் பாடப் பெறுபேறுகளில் எவ்வித குழப்பங்களும் இல்லை எனவும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்’

results

இவ்வருட க.பொத. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு பாடசாலைகளின் பெறுபேறுகள் நாளை காலை 10.00 மணிக்குப்பின் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:- www.doenets.lk

ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

44(4)

கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட இடமாற்றத்தை கண்டித்து நேற்று கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடமாற்றம் செயப்பட்டுள்ள ஆசிரிய,ஆசிரியைகளும் அவர்களுடைய சிறு குழந்தை களும் கலந்து கொண்டு கோஷமிட்டனர். எங்கள் குடும்பங்களை பிரிக்காதே ,தாய் ஒருஇடம், பிள்ளை ஒரு இடம்.  தந்தை ஒரு இடமா, என்பன போன்ற கோசங்களை எழுபியவர்களாக கல்முனை நூலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் வரை எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவர்களாக ஊர்வலமாக சென்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மகஜர் கய்யளிதனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் தின நிகழ்வு!

mlc0

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதி மேயர் நிஸாம் காரியப்பர், அவரது பாரியார்  மிஸ்ரியா நிஸாம் காரியப்பர், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் இக்கல்லூரியின் ஸ்தாபக அதிபர் எம்.ஸீ.ஏ.ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை முஸ்லிம் பெண்கள் கல்வியில் முதற் தரமாக விளங்கும் இக்கல்லூரியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயில்கின்றனர்.

க. பொ. த (சாதாரண தர) பரீட்சை இன்று நாடு முழுவதும் ஆரம்பம்

images

க. பொ. த (சா.த) பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் இப் பரீட்சை எதிர்வரும் 21ம் வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்காக 5,50,000 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ள தாகவும் இவர்களுள் 3,10,000 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகள் எனவும் இவர்களுக்காக வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் 3600 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணை யாளர் நாயகம் அநுர எதிரிசிங்ஹ தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆங்கில பிரிவு மாணவர்களின் கலை விழா!

zck bin 6 (Small)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஆங்கில பிரிவு மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் ஆங்கில பிரிவு பகுதித் தலைவர் எம்.எஸ்.அலிகான் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் மற்றும் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மட்டக்களப்பு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் கல்முனை அஹுரா ஜுவலரி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.பர்விஸ் அமீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை அல் – அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனை

q1
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை அல் – அஷ்ஹர் வித்தியாலயத்தில் கூட்டமும், ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனையும் இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.றஸாக் தலைமையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.