இந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு

1

(தெஹிவளை கல்கிசை விசேட நிருபர்)

இந்திய ஓவர்சிஸ் வங்கி உலக முழுவதிலும் உள்ள நாடுகளில் வியாபித்து இருக்கின்றது. இவ் வங்கி இந்தியாவில் உள்ள மிகப் பெரிய 200 கம்பணிகளுள் 53வது இடத்தை வகிக்கின்றது.

கொழும்பில் உள்ள வங்கி 1945ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தியர்கள் 3 பேர் சேவையாற்றுகின்றனர். ஏனைய 25 அதிகாரிகளும் இலங்கையர்கள். மேலும் 6 இலங்கை அதிகாரிகளையும் எமது வங்கிச் சேவையில் இணைத்துள்ளோம்.

இலங்கையில் மேலும் வர்த்தக முதலீடு விமான மற்றும் துறைமுகம் பெற்றோலியம் ,வீடமைப்பு, விவசாயத்துறைகளில் எமது வங்கி முதலீட்டு சில வியாபாரத்திட்டங்களை செய்துகொள்வதற்கு கடந்த 2 நாட்களாக கொழும்பில் துறைமுகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி தலைவர் அஜித் கப்ரால் பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

சில திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் வீடமைப்பு மற்றும் நீரிவிநியோகம் அடிப்படை வசதிகள் போன்றவற்றிலும் வங்கி முதலிட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்ரா கோட்டலில் நடைபெற்ற ஊடக மகாநாட்டில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் தலைவர் கலாநிதி எம் நரேந்திரா மேற்கண்ட வாறு தெரிவித்தார்

இவ் வங்கியின் 2 கிளைகள் கொழும்பில் உள்ளது. அடுத்த கிளையொன்று மாத்தறையில் திறப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இவ் வங்கியின் மொத்த உற்பத்தி இந்திய ருபாய் 2,99,555 குரோ 31.12.2011ஆகும். 31.12.2012ல் 3,43,186  31.12.2012 1,85,573 குரோ மொத்த வங்கி வைப்பிடாகும்.

இந்திய ஓவர்சிஸ் வங்கி 6 கிளைகள் கொங்கோங், சிங்கப்பூர், பேங்கொக் போன்ற நாடுகளில் சகல வசதிகளையும் கொண்ட வங்கி இயங்கி வருகின்றது. துபாய் சீன இலங்கை போன்ற நாடுகளில் கிளைகளும் நடைமுறைப்டுத்தி வரப்படுகின்றது. அத்துடன் தாயிலாந்து, வியட்நாமம், மலேசியா போன்ற நாடுகளிலும் ஓவர்சிஸ் வங்கி இயங்கி வருகின்றது.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 28201 அதிகாரிகள் சேவை புரிகின்றனர் 2748 சகல வசதிகளையும் கொண்ட கிளைகள் இயங்குகின்றன. 7000 கிளைகள் கிரமிய மட்டத்தில் இயங்குகின்றன. 40 வீதம் கடன்திட்டத்தினை அறிமுகப்படுத்தி வருகின்றோம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>