“ஹிஜாப் அணிய கூடாது” ஆசிரியயை அவமானப்படுத்திய கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலை

12552

கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும்  பாடசாலை வாசலில் வைத்து வழிமறித்து, ஹிஜாப் அணிந்து இனி பாடசாலைக்கு வர முடியாது என திட்டி,  குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது…

சமீபத்தில் ஆசிரிய இடமாற்றம் காரணமாக 7 முஸ்லிம் ஆசிரியைகள் கார்மல் பாத்திமா பாடசாலைக்கு புதிதாக வந்துள்னர். இவர்கள் வழமையாக தாம் அணிகின்ற ஹிஜாபுடன் பாடசாலை செல்ல, அங்குள்ள அதிபர்கள் உட்பட ஆசிரியர்கள் அனைவரும், ” எங்கள் பாடசாலையில் ஆசிரியர்களுக்கான உடை சேலை கட்டுவதுதான் “ஆகையால் நீங்களும் அவ்வாறுதான் வரவேண்டும் என்று கட்டயப்படுத்தியுள்ளனர்.

‘ இல்லை இது எங்கள் மார்க்கம் சம்பந்தப்பட்டது ‘ என்று, குறிப்பிட்ட ஆசிரியைகள் விளக்கியும் பாடசாலை நிர்வாகம் அதை ஏற்காமல் ” சேலை தான் கட்ட வேண்டும் ” என்று  கட்டாயப்படுத்தியதோடு  விசாரணை என்ற பேரில் அவமானப்படுத்தியும் உள்ளனர்.

இன்று மருதமுனையை சேர்ந்த குறித்த ஆசிரியை ஹிஜாப் உடையில் பாடசாலைக்கு சென்றபோது, பெண் ஆசிரியைகள் அவரை பாடசாலை வாசலிலே வைத்து வழிமறித்து இந்த உடையை போட்டுக் கொண்டு  உள்ளே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் பாடசாலை அதிபரும் தனிப்பட்ட விசாரணை என்ற பேரில் குறித்த ஆசிரியையை இனி இந்த உடையில் வரக்கூடாது   என்று நிர்பந்தித்துள்ளார். பின்னர் பிரச்சினை  பாரிய அளவில் சென்றதுடன், குறித்த ஆசிரியையை அணைத்து ஆசிரியர்களிடத்திலும் மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளனர்.

சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் பாடசாலை ஒன்று இவ்வாறு கீழ்த்தனமாக நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்கதும் வேதனைக்குரியதுமான விடயமாகும்.

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் கார்மல் பாத்திமா பாடசாலையில் சேலை அணியாது கிருஸ்தவ ஆசிரியைகள் அவர்களின் மத கலாசார உடையில் கற்பிக்கின்றனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

12 Responses to “ஹிஜாப் அணிய கூடாது” ஆசிரியயை அவமானப்படுத்திய கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலை

 1. +1 Vote -1 Vote +1Fairooz
  says:

  இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிராக ஏன் யாரும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கு போட முடியாதா?

 2. -1 Vote -1 Vote +1Human being
  says:

  Stupid school and Administration.
  Why this matter didn’t ‘discuss with Divisional, District or Provincial Educational Directors.

  It’s seems like Racism and Violation against to Human being.
  It is must be taken to an account.

 3. Vote -1 Vote +1Shihab Aaqil
  says:

  இது வரை காலமும் கார்மேல் பாத்திமா கல்லூரியில் கற்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாது பாடசாலை செல்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இப்பொழுது முஸ்லிம் ஆசிரியைகளும் இந்நிலமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
  ருவன்வெல்ல பிரதேச சிங்களப் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தையும், அதற்கான உயர் நீதி மன்றத் தீர்ப்பையும் கார்மேல் பாத்திமாக் கல்லூரி அதிபர், அருட் ககோதரர் அவர்கள் நினைவுகூறட்டும்.

 4. Vote -1 Vote +1Rizwan
  says:

  idellame awargal thittamittu seyda sadiyagawum irukkalam
  alladu awargalay ariyamal seydurkalam
  muslim enda adippadayyil naam porumayay kayyalawendum
  alladu engaludayya muslim pen manigalin

  * padippukkaha awargalin edirkaalatikkaha anaywaru ALLAHWIDAM DUHA cheyyunggal
  * ooril ulla muslim matra padasaalay halukku mathuwendum
  * alladu idarku karanam anawargal yaarendu parthu awargal meedu nadawadikkay edukka wendum karanam (ennayawinalum badippadu engaludayya muslim pillay galin padippu,edirgalam thaan)
  * matra paadasalhalil ulla athibarhal anda divitionku ulla ministergal iwargalukku kooda ondum seyya mudiyaada?

  idudaan sari endadu enakku thondrinadal naan eludinen ennudayya mashura idu daan
  edu thawaraha pesirundal mannittuk kollawum

  • Vote -1 Vote +1Farsan Rasfudeen
   says:

   assalkkm,இலங்கையில் பல்லின சமூகம் வாழ்கின்ற படியால் இங்குள்ள மக்களுக்காக அரசியல் அமைப்பு சட்டத்தில் பின்வரும் வசனம் பொரிக்கபட்டுல்லதை கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையின் அதிபர் உற்று நோக்கவேண்டும்.என்னவென்றால் “எந்த ஒரு இலங்கை பிரஜையும் தனது மதத்தை பின்பற்றுவதட்கும் அதனை சரியான முறையில் பேணுவதற்கும்” யாப்பில் வலியுறுத்த பட்டுள்ளது .உண்மையில் அந்த பாடசாலையில் ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியையை அவமானபடுத்தியது பாரியதொருகுற்றமாகும் இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .ஒருவர் ஒரு தவறை செய்தால் அதனை சரியான முறையில் அணுகுவதுதான் மனிதனின் பண்பு.ஆனால் குறித்த ஆசிரியை தவறை செய்யவில்லை மாறாக அவருடைய மதத்தை பேணி இருக்கின்றார்.ஒழுக்கத்தை சிறந்த முறையில் கற்றுகொடுக்கும் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் அவர்களுடைய ஒழுக்கத்தை கற்பதில் வளிதவறிட்டார்கள்.உண்மையில் இவர்களுக்கெதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். .எவ்வாறு என்றால்….
   1.எனது மதத்தை சுதந்திரமாக பேணுவதற்கு குறித்த பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் தடையாக இருந்தார்கள்.
   2.மானரீதியான வழக்கு
   3.கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
   4.உளரீதியான பாதிப்புக்குள்ளானேன்
   இன்னும்…..அவர் நினைப்பதெல்லாம் வழக்காக பதிவு செய்யலாம்.
   அண்மையில் சிங்கள பாடசாலையில் முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து போகலாம் என்று நாட்டின் அதியுயர் நீதிமன்றமான உச்ச நீதி மன்றமே உத்தியோக பூர்வமாக தீர்ப்பளித்துள்ளது. நான் ஏன் இதை கூறுகின்றேன் என்றால் இன்று நாட்டில் இனரீதியான மதரீதியான பிளவுகள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது.இதில் யாரோ தனது சுய லாபத்திற்காக நாட்டில் உள்ள மக்களை குழப்புவதற்கான செயற்ட் பாடுகளில் இறங்கியுள்ளனர்.எனவே குறிப்பிட்ட ஆசிரியைக்கு வந்தது போன்று இலங்கையில் ஏனைய மத ஆசிரியர்களுக்கு வராமல் பாதுகாப்பது ஒவ்வொரு மததத்தவர்களுக்குமுரிய பொறுப்பாகும்…..

   • Vote -1 Vote +1Asanaar
    says:

    இந்த ஆசிரியை ஒரே சூலில் 03 ஆண் குழந்தைகளை பெற்றதன் பின்னரும் பாடசாலைக்கு சாரி கட்டி ஸ்காப் அணிந்து நீட்ட கை சட்டை போட்டு இஸ்லாமிய பெண்ணாகத்தான் பற்றிமாவுக்கு சென்றார்.அந்த நேரம் இந்த உடை இஸ்லாமிய உடையாக தெரியவில்லையா? அல்லது அது கெக்கிராவ கலாச்சாரமா? இப்போதைக்கு மட்டும் ஏன் இந்த குழப்பம் இதன் பின்னணியில் யாரும் உமர் முக்தார் உள்ளனரா

    • Vote -1 Vote +1மருதமுனையான்
     says:

     சபாஷ். சரியான பதில் அன்சார் அவர்களே. தலைவணங்குகின்றேன்

   • Vote -1 Vote +1மருதமுனையான்
    says:

    அன்புள்ள பர்சான் அவர்களே. கடந்த நான்கு வருடங்களாக உங்களால் குறிப்பிடப்படும் ஹிஜாப் அணியாமல் வேறு உடைகளை அணிந்து இஸ்லாத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஆசிரியைக்கு எதிராக எந்தச்சட்டத்தின் கீழ் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனத் தெரிவிப்பீர்களா?

 5. Vote -1 Vote +1Mohamed Ishark, Kalmunai
  says:

  கல்முனை காரமேல் பற்றிமா நீண்ட கால வரலாறு கொண்ட கௌரவத்துக்குரிய பாடசாலை. இங்கு நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர் எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்ற போது கல்முனை பற்றிமாவில் முஸ்லிம் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் பெரு முயற்சி எடுப்பது அங்குள்ள ஒழுக்க நெறிக்குத்தான். அதே போன்றுதான் பல வருடகாலமாக முஸ்லிம் ஆசிரியைகளும் அங்கு கற்பிக்கின்றனர். ஆவரகள் இப்பாடசாலையின் கலாசாரத்திற்குப் பாதிப்பில்லாமலும் இஸ்லாமிய நெறிகளுக்கமைவாகவும் அங்கு கற்பிக்கின்றனர்.
  இவ்வருட இடமாற்றத்தின் போது சம்மாந்துறை வலயத்தில் இருந்து 07 ஆசிரியைகள் இப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளனர். இவர்கள் ஹபாயா உடை அணிந்து பழகியவர்கள். இவர்களிடம் பாடசாலை அதிபர் பாடசாலை கலாச்சாரம் பற்றி கூறியுள்ளார். எனினும் வயதானவர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களை பாடசாலை நிருவாகம் அப்படியே விட்டு விட்டது. அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
  எனினும் இப்பாடசாலையில் நான்கு வருடங்களாக பாடசாலை சீருடையான சாரியுடன் பாடசாலை செண்று வந்த மருதமுனை ஆசிரியை ஒருவர் திடீரென நேற்று முன் தினம் ஹபாயா அணிந்து வந்த போது அங்கு கற்பிக்கும் சக தமிழ் ஆசிரியைகள் இவரிடம் வினவும் போதே இந்த பிரட்சினை ஏற்பட்டிருக்கிறது. குறித்த ஆசிரியை கடந்த 04 வருடமும் இஸ்லாத்தை அவமதித்தாரா? அல்லது திட்டமிட்டு பாடசாலைக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
  இப்பாடசாலையில் கல்வி பயிலும் பிள்ளைகளின் தகப்பன் என்ற வகையில் இப்பிரச்சினையை பூதாகரமாக்காமல் கல்லூரி அதபர் கல்விப் பணிப்பாளர் வலயக்கல்விப் பணிபபாளர் ஆகியோருடன் குறித்த ஆசிரியை பேசி சுமுக நிலைக்கு வரவேண்டும் என்பதே எனது தயவான வேண்டுகோள்.

 6. Vote -1 Vote +1inpa
  says:

  can you please get both sides of the story before you jump to conclusion? It’s breaking my heart to see these comments about my (old)school.one of the many things, beside the education,I learned from that school is treating every one the same despite their colour, race, language, religion or age.

 7. Vote -1 Vote +1மருதமுனையான்
  says:

  சரியான பதில் இஷார்க் அவர்களே. கடந்த நான்கு வருடமாக குறிப்பிட்ட மருதமுனை ஆசிரியைக்கு ஹிஜாப் அணியும் இஸ்லாமிய முறை தெரியாதா? குறித்த ஆசிரியைகளின் தாய்மாரும் ஹிஜாப் தான் அணிந்து கொண்டு திரிகிறார்களா? இவ்வாறான போலித்தனமான நடவடிக்கைகளினால்தான் புனிதமான இஸ்லாம் ஏனைய சமூகத்தவர்களால் மதிக்கப்படுவதில்லை. ஒரு உண்மையான முஸ்லிம் எனும் அடிப்படையில் பாடசாலை அதிபரிடம் நான் வைக்கும் பணிவான கோரிக்கை என்னவென்றால் இவர்களுக்காக உங்களின் பாடசாலையின் விதிகளை மாற்ற வேண்டாம். பாடசாலை விதிகளுக்கு கட்டுப்படாத ஆசிரியைகளுக்கு எதிராக ஒழுக்கட்ட்று நடவடிக்கை எடுங்கள். அதற்கு எல்லா வகையிலும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் ஆதரவு வழங்குவார்கள்.

 8. சிதைந்து போன சமுதாயமாக தற்ப்போது தடுமாறி கொண்டு இருக்கும் என்யினிய இலங்கைவாள முஸ்லிம் சகோதரர்களே எம்மில் இருந்த பேர்ரலை ஒன்று எம்மைவிட்டு போனதன் பின் நாம் இவைகள் மாத்திரம் இல்லாமல் பல்வேறு ருபங்களில் நாம் பல பிரச்சனைகளை கடந்த சல வருடங்களாக குறிப்பாக முஸ்லிம்ங்கள் மாத்திரம் எதிர் நோக்கி வருகிறோம் அது குறிப்பாக மேல்மாகாணங்களில் கொழும்பு கண்டி இப்படி அங்கே உள்ள சின்ன சன்ன கிராமங்களை இலங்கை அரசாங்மும் அவர்கள் ஏவிகளும் அங்கு அந்த முஸ்லிம் அதையடுத்து யாள் முஸ்லிம் அதை நாம் நினைத்து பாரக்க முடியாது எல்லாத்துக்கும்மேல் இப்போது கிளக்கில் கல்முனையில் முஸ்லிம் பென்ங்கள் ஸ்க்காப் போடக்கூடாது என்று ஸ்க்கூள் பெண்ங்கள் அரச அலுவலகம் இப்படி எனவே தயவு செய்து என்னை தொட்டு தோழமை கொண்ட எனது தாள்மைக்குரிய கிளக்குவாள் முஸ்லிங்களே நல்ல முறையில் அல்லாவிடம் கேழுங்கள் இலங்கை வாள் முஸ்லிம் அனைவருக்கும அல்லா துணை அல்ஹம்துலில்லா <<>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>