ipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்

cri

இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் போட்டியாளர்கள் இங்கிலாந்து தொடருக்கு தாமதமாகவே செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மே 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், ராஜஸ்தான் றோயல்ஸ், ஹைத்ரபாத் சன்ரைசஸ், மற்றும் மும்பாய் இன்தியன்ஸ் அணிகள் இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில் உள்ளன.

அவற்றில் பங்குபற்றும் இலங்கை போட்டியாளர்களான குமார சங்கக்கார, லசித் மலிங்க, குசல் ஜனித் பெரேரா, மற்றும் திசர பெரேரா ஆகியோரில் ஒருவரேனும், இங்கிலாந்துடனான வெற்றியாளர் கிண்ண தொடரில் தாமதமாகவே பங்கேற்பார்கள் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் மும்பாய் இன்தியன்ஸ் ஆகிய அணிகள் நாளை மறுதினம் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளன.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>