தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

3d578f8f-5dfd-48b9-bc01-3d9c7c0f8ab8_S_secvpf

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், முதல் லீக் போட்டி கார்டிபில் நடைபெற்றது. இதில் இதில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் சர்மா களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். சர்மா 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய தவான் 114 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த கோலி 31 ரன்னில் வெளியேற, கார்த்திக், ரெய்னா, டோனி அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஜடேஜா மட்டும் நிலைத்து விளையாடி 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 331 ரன்கள் குவித்தது.

332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடியது தென்ஆப்பிரிக்கா.

தொடக்க வீரர்களாக ஆம்லா மற்றும் இக்ராம் களமிறங்கினர். இருவரும் வந்த உடனே அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த பீட்டர்சன் மற்றும் டிவில்லியர்ஸ் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பீட்டர்சன் 68 ரன்னிலும் டிவில்லியர்ஸ் 70 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, இறுதியில் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 305 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>