கல்முனை சாஹிராவும் சீரழிக்க நினைக்கும் அதிகார வர்க்கமும்!

zck

(எம். காமில்)

அரசியலால் தான் எமது சமூகத்திலும் ஊர்களிலும் குழப்பம் என்றால் அந்த நோய் இப்போது கல்வியையும் பாதித்து விட்டது என்று நினைக்கும் போது வெட்கமும் ஒருவகையான ஆத்திரமும் ஏற்ப்படுகின்றது .

இன்று எமது கல்லூரியில் நடைபெற்ற இவ் ஒழுக்கம் கெட்ட அசம்பாவிதமானது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் எமது கல்லூரிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் அவப்பெயரை உண்டு பண்ணும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

ஒரு மனிதனின் சிறப்பு அவனது கல்வியை கொண்டு தீர்மானிக்கப்படும் ஆனால் இன்றோ அந்த கல்வி சில சாக்கடைகளுள்ளும் சென்று இருப்பதால் அதன் இயல்புத் தன்மை மற்றும் அசிங்கம் போன்றன வெளிப்பட்டதன் விளைவு இவ்வாறான சம்பவங்களே.

நான் இதுவரைக்கும் தனிநபரை விமர்சித்தது இல்லை இருந்த போதிலும் இவ்வாறான சம்பவங்கள் எமது கல்லூரிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பெரும் முட்டுக்கட்டையாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதே நபர் கடந்த காலங்களில் எமது கல்லூரியின் புதிதாக அமையப்பட்ட பழைய மாணவர் சங்கத்தையும் அதன் பிரதிநிதிகளையும் அவமதித்து தனது கருத்துக்களையும் செயர்ப்படுகளையும் மேற்கொண்டு இருந்தார்.

இது வரவேற்க தக்க ஒன்றல்ல

இருந்தாலும் இவர் மறந்து இருக்கலாம் கடந்த காலங்களில் அதாவது 90களின் பின் அமைக்கப்பட்ட எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு சேகரித்த நிதியை தான் தோன்றித்தனமாக செலவு செய்தது மாத்திரமன்றி அதற்க்கான எவ்வித கணக்கு வழக்குகளோ இதுவரையில் காட்டப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே இப்படிப்பட்ட செயர்ப்படுகளை இவரை போன்ற நபர்களினால் விமர்சிக்க துப்பில்லை ஏன் இவரும் அங்கம் வகித்தார் என்பதாலோ என்னவோ திறம்பட செயற்ப்படும் தற்போதைய சங்கத்தை விமர்சிப்பது என்பது காழ்ப்புணர்ச்சியே.

இன்று நடைபெற்ற சம்பவமானது எமது கல்லூரி வரலாற்றில் அழிக்கமுடியாத பெரும் கறையாக மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் ,சமூகம் போற்றவர்களின் மனதில் படிந்து விட்டது.

இதற்க்கான அடிப்படை காரணம் என்ன யாரும் சிந்தித்த துண்டா?

இவர்களது சிந்தனையில் கல்முனை சாஹிரா கல்லூரியானது பொன் முட்டையிடும் வாத்து எப்படியாவது கல்லூரி அதிபர் பதவியையோ அல்லது தனது கட்டுப்பாட்டிலோ அதன் நிருவாகத்தை வைத்து இருக்கும் போது தான் மற்றும் தன்னை சேர்ந்த குழுக்கள் விரும்புவது போல் பெரும் கொள்ளை அடிக்கலாம் கொந்தராத்துகளை மேற்கொள்ளலாம் என்ற நயவஞ்சக எண்ணமே தவிர கல்லூரியை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல அல்ல கிட்டதட்ட அரசியல் வாதியும் பிரதி கல்விப்பனிப்பாளரும் ஓன்று தான் போல.

இப்படிப்பட்ட நபர்களால் தான் பிரதேசவாதம் என்னும் நோய் பாடசாலை முதல் இருந்து மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது.

கல்முனை சாஹிராவின் 60 வருட கால கட்டிக்காத்த மரியாதை கேடுகெட்ட இவ்வாறான அதிகாரிகளினால் கப்பலேரியத்தை எந்த ஒரு மாணவனாலும் மற்றும் பழைய மாணவர்கள் கல்லூரி நலன் விரும்பிகள் பெற்றோர் போற்றவர்களால் ஜீரணிக்க முடியாது பொறுமையாக இருக்கும் இவர்கள் ஓன்று பட்டு திரண்டேளுந்தால் இப்படிப்பாட்ட நபர்களின் நிலை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலையில் இக்கல்விப்பனிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் ஆவணமக்கப்பட்டு கல்வியமைச்சுக்கும்,ஜனாதிபதி செயலகத்துக்கும் மற்றும் மாகாண கல்வியமைச்சு மற்றும் செயலாளர் போன்றவர்களுக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இனிவரும் காலம்களில் கேடுகெட்ட சமபவங்கள் நடைபெறாது தடுப்பது எமது கல்லூரியின் நலன் விரும்பிகள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இந்த பிரச்சினையை மாணவர்கள் மத்தியில் ஊடுருவ விடாமல் சற்று உயரிய சிந்தனையுடன் சம்பந்தப்பட்டவர்கள் செயற்ப்படும் போது ஒரு சிறந்த தீர்வை எட்டலாம் இதற்க்கு எமது கல்லூரி நிருவாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கமும் மற்றும் பழைய மாணவர் சங்கமும் ஒத்துழைப்பாக செயற்ப்படவேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் எமக்கு கல்வி வழங்கிய கல்வித்தாயகிய எமது கல்லூரியை இவ்வாறான கேடுகெட்ட நபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பாதுகாத்து அருள் புரிவானாக…ஆமீன்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>