கொரிய மொழி பரீட்சை முடிவு நாளை வெளியாகிறது

exam-results

கொரிய மொழி தேர்ச்சி போட்டிப் பரீட்சை முடிவுகள் நாளை (01) வெளியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

பரீட்சை முடிவுகளை www.slbfe.lk, www.eps.go.kr மற்றும் www.hrdkorea.or.kr ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பரீட்சையில் 200ற்கு, 80 அல்லது அதற்கு மேல் பெற்றவர்கள் சித்தியடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவர்.

வெட்டுப்புள்ளி விபரங்களை கொரியாவின் மனிதவள திணைக்களம் பின்னர் வெளியிடும்.

கடந்த ஒக்டோபர் 19, 20ம் திகதிகளில் இடம்பெற்ற கொரிய மொழிப் பரீட்சையில் 20,492 பேர் பங்குபற்றினர்.

இதேவேளை, பல மோசடிகள் இடம்பெற்று வருவதால் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் தங்களது சுட்டெண் மற்றும் கடவுச்சீட்டு இலக்கம் என்பவற்றை வெளி நபர்களுக்கு வழங்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>