யாழ் பலகலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Ayyoob-Asmin-254x300

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் ஒரு சில மாணவர்கள் தாடி வளர்த்திருக்கின்றார்கள் என்ற காரணத்தினால் உயர்வகுப்பு மாணவர்களின் தாக்கப்பட்டத்தைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன்.

நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியபோது பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாகவும், தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே நல்லிணக்க செயற்பாடுகள் அதிகப்படுத்தப்படவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன்.

கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் பலவிதமான இனத்துவ விரோத செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள். பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒருசில கடும்போக்குடைய மாணவர்களே இதன் பின்னணியில் இருந்திருக்கின்றார்கள் என்பதும், பெரும்பாலான தமிழ் மாணவர்கள் இத்தகைய இனத்துவ விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும், பலகலைக்கழக நிர்வாகம் இத்தகைய விடயங்களுக்கு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்ற அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் கடும்போக்குடைய மாணவர்களை எச்சரித்தும் வந்திருக்கின்றது என்பதையும், அறியமுடிந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர் சமூகம் என்பவற்றுக்கு அப்பால் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகம் பல்கலைக்கழக சமூகத்திடம் காணப்படுகின்றது. இவ்வாறு வெளிச்சக்திகள் மாணவர்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்துவது தொடர்பில் இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையிலும், அவ்வாறான நிலைமைகள் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது.

பொதுவாக யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்-முஸ்லிம் மாணவர்களின் நல்லுறவு அவர்களது சீரான கல்விச்செயற்பாட்டிற்கும், கற்கைக்குப் பின்னரான சமூகச் செயற்பாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்தகைய நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து நாம் சிந்திக்கவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கும் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கமான நிலை ஏற்படுவதற்கும் எம்மாலான ஒத்துழைப்புகளை வழங்குவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இவ்வாறான இனத்துவ விரோத செயற்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் அவற்றை உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தின்  கவனத்திற்கு கொண்டுவருவதனூடாகவும், பல்கலைக்கழக மட்டத்தில் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்துவதனூடாகவும் நிவர்த்திக்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ்விடயங்களில் பலகைக்கழகத்தின் மாணவர் அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பரஸ்பரம் உறவுகளை சீராகப் பேணிக்கொள்வதும் சிறப்பானதாக இருக்கும் என இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>