53 பாடசாலைகள் பங்கேற்கும் கலாசார பேரணி கொழும்பில்

dddd

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதி பலிக்கும் வகையில் 53 பாடசாலைகள் பங்குபற்றும் கலாசார பேரணியொன்று நாளை மறுதினம் கொழும்பில் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரி முன்பாக ஆரம்பிக்கும் பேரணியை சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்பார். அவருடன் பிரதமர் உட்பட அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் நாலாபுறத் திலிருந்தும் 100 தேசிய பாடசாலைகள் வர வழைக்கப்பட்டு அதி லிருந்து 53 பாடசா லைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. குறிப்பாக கண்டி தலதா மாளிகை எசல பெர ஹெராவுக்கு பங்களிப்பு செய்த தேசிய பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன. சுமார் 3750 மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்பர்.

53 பாடசாலைகளும் 53 நாடுகளைப் போன்று அவர்களது பாரம்பரிய உடைகள், பாரம்பரிய நடனம், அந்தந்த நாடுகளின் தேசிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள், நடனங்களுடன் பேரணியாக செல்வார்கள்.

நவம்பர் 3 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு ரோயல் கல்லூரிக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகும்.

மாலை 6.30 மணிக்கு கலாசார பேரணி சுதந்திர சதுக்கத்தை சென்றடையும். அந்தந்த நாடுகளின் பாரம்பரிய கலை கலாசாரங்கள் தொடர்பாக இணையத்தளத் தினூடாக பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கலாசார பேரணியின் இறுதியில் 2000 மாணவர்கள் பங்கு பற்றும் கலாசார நிகழ்வும் இடம்பெறும்.

பொதுநலவாய தலைவர்கள் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல மாணவர்கள் மூவர் பொதுநலவாய அமைப்பின் அடுத்த தலைவரான ஜனாதிபதியிடம் மாணவர்களின் பிரகடனம் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் சுயாதீன தொலைக்காட்சியில் நேரடி அஞ்சல் செய்யப்படும்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>