ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

805777-virat-kohli-india

 7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆறு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என சமநிலை வகித்தது. ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்தது. “டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பொறுப்பாக ஆடிய தவான், ஒருநாள் போட்டியில் தனது 5வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது தோகர்டி “சுழலில்’ தவான் (60) சிக்கினார். தேவையில்லாமன் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட விராத் கோஹ்லி (0) “ரன்-அவுட்’ ஆனார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தோகர்டி, மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். சுரேஷ் ரெய்னா (28), யுவராஜ் சிங் (12) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கேப்டன் தோனி, கூல்டர் நைல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது 49வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மெக்கே வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 158 பந்தில் 16 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 209 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி பந்தில் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட தோனி (61) “ரன்-அவுட்’ ஆனார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் தோகர்டி 2, மெக்கே, பால்க்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி., தோல்வி: இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. பின்ச் 5 ரன்னில் அவுட்டானார். இதன் பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹாடின் 40 ரன்களும், மாக்ஸ்வெல் 60 ரன்களும் எடுத்தனர். பால்க்னர் அதிரடியாக விளையாடி 116 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

ரோகித் சாதனை: 16 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா, அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.