மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பிரதேசத்தில் வாகன விபத்து

bus05

மட்டக்களப்பு பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோயில் அருகில் இன்று ஒரு வீதி விபத்து நடைபெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிந்த தனியார் பஸ் வண்டியும், மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

காலை 6 மணிபோல் மட்டக்களப்பு நோக்கிய பயணித்த தனியர் பஸ் வண்டி இன்னுமொரு பஸ் வண்டியை முந்திச்செல்ல முயன்றவேளை கட்டுப்பாடை இழந்து எதிரே வந்த இ.போ.ச பஸ் வண்டியுடன் பக்கப்பாட்டில் மோதியதன் காரணமாக அருகில் உள்ள வீடு ஒன்றின் மதிலை உடைத்துச்சென்றுள்ளது. அதிஷ்டவசமான எந்த உயிராபத்தும் ஏற்படவில்லை. தனியார் பஸ்வண்டி சாரதியும், நடத்துனரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த வீதி விபத்தில் காயமடைந்தவர்கள் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

bus01 bus05 bus03

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.