கல்முனை பிரதேசத்தில் விலை போகும் கல்வி..!

images11

(முனையூரான் முஹம்மது  காமில்)

இலங்கைதீவானது சுதந்திர மடைந்த காலந்தொட்டு அன்றிலிருந்த அரசாங்கம் முதல் இன்றுள்ள அரசாங்கள் வரை பாட சாலை கல்விமுதல் பல்கலைக்கழக கல்வி வரை இலவசமாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் இன் பங்கு அளப்பெரியது இப்படிப்பட்ட பெரிய வரலாற்றைக்கொண்ட இலவச கல்வி முறையானது இன்று வெறும் அற்ப பணத்துக்காக ஏலம் விடப்படுவது கொடுமையிலும் கொடுமை.

மாணவர்களிடையே வேற்றுமை காணப்படக்கூடாது என்றுதான் வெள்ளை நிற ஆடை சகல மாணவர்களும் அணிகின்றனர் அதே போல்தான் கல்வியும் சகலருக்கும் சமமானதே ஆனால் இன்றோ குறிப்பாக எமது கல்முனைப்பிரதேசத்தில் நடைபெறுவது என்ன?? யாராவது சிந்தித்து பார்த்த துண்டா !!

ஏன் சிந்திப்பதற்கும் செயல் படுவதற்கும் நேரமில்லையா..?

இன்று கல்வியானது தனக்கென்று ஒருபாதையை உருவாக்கி பயணித்து கொண்டு இருக்கின்றது இது மறுக்க முடியாத உண்மை அதை தேடிச்சென்றவர்தான் அதை அடைந்து கொள்ளுவார் இது எம்பெருமானார் அவகளின் வாக்கும் கூட “தேண்டித்தவன் பெற்றுக்கொள்ளுவான்”

ஆனால் இன்றோ குறிப்பாக எமது கல்முனைப்பிரதேசத்தில் கல்வியானது பணத்துக்காகத்தான் விற்கப்படுகின்றது என்பது கொடுமையிலும் கொடுமை. திறமை இல்லாவிட்டலும் பணமிருந்தால் அக்கல்வியை அடைந்து கொள்ளலாம் ஆனால் திறமையும் முயர்ச்சியும் இருந்தும்கூட பணமில்லாவிட்டால் அம் மாணவர்களின் நிலைமை அந்தோ பரிதாபம்.

ஒரு குழந்தை பிறந்து நான்கு வயதாகியது தொடக்கம் கல்வி கற்க தயாராகின்றது அல்லது தயாரக்கப்படுகின்றது இது முற்றிலும் உண்மை இந் நிலையில் அந்த குழந்தைகளை வழி நடத்திச்செல்ல வேண்டியதில் பெற்றோரின் பங்கு அளப்பெரியது.

தற்போதைய நிலையில் இலங்கை தீவை பொறுத்தவரையில் விலைவாசி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது அன்றாட வாழ்வுக்கு தேவையான உணைவை பெறுவதற்கே திண்டாடும் இந்நேரத்தில் ஒரு ஏழை விவசாயி தனது குழந்தைகளுக்கு எப்படி இந்த விலை போகும் கல்வியை வழங்குவான்.

எமது ஊர் குறிப்பாக கல்முனைப்பிரதேசம் செல்வ செழிப்பு மிக்க பிரதேசம் என்பதில் எந்த குறைபாடும் இல்லை அதன் காரணத்தினால் தான் நிறைய தொழில் முறை வைத்தியர்களும் ஏனைய தொழில் நிலை சார்ந்தோரும் இன்று எமது ஊரை நோக்கி படை எடுக்கின்றனர் ஏன் பணத்துக்காகத்தான்..

எமது ஊரில் எத்தனையோ பாடசாலைகள் எத்தனையோ சிறந்த ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள் இருந்தும் கூட அங்கு கிடைக்காத கல்வியை வெளியில் காசுக்கு பெறக்கூடிய ஒரு கேவலமான நிலையில் தான் எமது பிரதேசம் இருக்கின்றது என்பதை இட்டு வெட்கப்படுகின்றேன்.

குறிப்பாக தொண்ணூறுகளின் பிற்ப்பாடே எமது பிரதேசத்தில் பணத்துக்கு கல்வியை விற்கக்கூடிய கல்வி (வர்த்தக) நிலையங்கள் உருவெடுத்தனஎன்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.அதன் பிற்ப்பாடே பாடசாலைகள் குறிப்பாக உயர்தரம் கற்ப்பிக்கும் பாடசாலைகள் வெறும் பெயருக்கு இயங்க ஆரம்பித்தன என்பது மறுக்க முடியாதததும் மறைக்க முடியாததுமான உண்மை.

குறிப்பிட்டு சொல்லுமிடத்து உயர்தரம் கல்விகற்கும் மாணவர்கள்தான் பெருமளவு இதில் பாதிக்கப் படுகின்றனர் . எத்தனையோ நல்ல பல ஆசிரியப் பெருந்தகைகள் கல்வியலாளர்களை கொண்ட எமது பிரதேசம் ஒரு சில பெயர்தாங்கி ஆசிரியர்களினால் ஆவமானப்படவேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

அரசாங்கம் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை தயார் செய்யும் போது பாடசாலை நாட்கள் மற்றும் மணித்தியாலங்களை கருத்திற்கொண்டுதான் தயார் செய்கின்றது. ஆனால் எமது பாடசாலைகளில் குறிப்பாக உயர்தரம் படிப்பிக்கும் சில ஆசிரியர்கள் பட பிரிவுகளை நேரத்துக்கு முடிப்பதில்லை என்பது பெரும் குறை பாடத்திட்டத்தின் அரைவாசியைகூடசில ஆசிரியர்கள் தாண்டுவதில்லை என்பது மறைக்கமுடியாத பெரும் உண்மை ஆனால் இந்த ஆசிரியர்கள் அற்ப பணத்துக்காக கல்வி வியாபாரம் செய்யும் இடங்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முழுப்பாடதிட்டதையும் முடிப்பது பெரும் வியப்புக்குரியது நான் யாரையும் குறிப்பிட்டோ யாரையும் நோகடிக்கவோ சொல்லவரவில்லை உங்களுக்கு ஏழை மாணவர்களால் வழங்கப்படும் பணத்துக்கு பின்னல் உள்ள சோக வரலாற்றேயே சொல்ல எத்தனிக்கின்றேன்.

இன்றைய நிலையில் ஒரு ஏழை விவசாயியின் மகன் (மாணவன்) உயர்தரம் கற்க வேண்டிய தேவை ஏற்பபட்டால் பாடசாலை கல்வி உரிய முறையில் கிடைக்காத விடத்து தனியார் கல்வி வியாபார நிலையங்களை நாடும்போது மாதாந்தம் பத்தாயிரத்துக்கு மேற்ப்பட்ட தொகையை செலவிட வேண்டி வருகின்றது. இச்சுமையை அவ் விவசாயியே தாங்கவேண்டியுள்ளது.இன் நாட்டில் தற்போதுள்ள நிலையில் அன்றால ஜீவனோபாய தேவைகளை நிறைவேற்றுவதே பெரும் சுமையாக இருக்கும் போது எப்படி விலை போகும் கல்வியை ஏழை மாணவர்கள் பெறுவது.இதனால் திறமை இருந்தும் பணமில்லாத காரணத்தினால் கூலித் தொழிற்கும் விவசாயம் செய்வதற்கும் செல்லுகின்ற வறிய மாணவர்களை இட்டு நான் மனம் வெதும்புகின்றேன்.

எமது சமூகமே நீ சிந்திக்க மாட்டாயா!! நீ சிந்திக்காததால் நீ தொடர்ந்து எல்லாவற்றிலும் முட்டாளாக்கப்படுகின்றாய்! இந்த உண்மையை நீ என்று அறிவாய்…?

பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள் !! நீங்கள் பெறாத கல்வியை உங்களது குழந்தைகள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கம் உண்மைதான் இருந்தாலும் எமது அரசாங்கம் எமது நாட்டு மக்களுக்காக வழங்கும் இலவசகல்வியானது எமது சமூகத்துக்கு ஒழுங்காக சென்றடைகின்றதா என்பதை அடிக்கடி பாடசாலைக்கு சென்று உற்றுநோக்கவும் அப்போதுதான் அங்குள்ள குறைபாடுகள் நிபர்த்தி செய்யப்படும்

செலவழிப்பதால் மட்டும் தனது குழந்தைகள் சீரான கல்வியை பெற்றுக்கொள்ள முயாது நாமும் சிறந்த வழிகாட்டணும்.

கல்வி வியாபாரம் ஒரு புறம் நடக்கட்டும் அதில் எமக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை ஆனால் பாடசாலையில் கல்வி ஒழுங்குற பாடத்திட்டதிற்கு ஏற்ப கற்பிக்க படவேண்டும் என்பதே எனது நோக்கம்.

எத்தனையோ திறமையான ஆசிரியர்கள் இருந்தும் ஏன் நாம் இன்னும் பின் நிற்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் எமது பிரதேச வாழ் மக்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து சிறந்த பாதையில் பயணிக்க செய்வானாக..!! ஆமீன்..

‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.