பொதுநலவாய சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் இன்று கொழும்பில்

Sri Lanka Prepares To Host Commonweath Heads Of Governnent Meeting

(NH) பொதுநலவாய சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பொதுநலவாய சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம உட்பட பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலை 10 மணி தொடக்கம் மதியம் ஒரு மணி வரையும், பிற்பகல் மூன்று மணி தொடக்கம், மாலை ஆறு மணிவரையும் இரண்டு கட்டங்களாக இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஓர் அங்க மாகவே இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித் துவப்படுத்தும் சகல சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இன்று இரவு எட்டு மணிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவினால் கொழும்பு கின்ஸ்பரி ஹோட்டலில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளான பொதுநலவாய இளைஞர் மாநாடு நேற்றுக்காலை ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனுபுற சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் பொதுநலவாய மக்கள் மன்ற மாநாடு காலி மற்றும் ஹிக்கடுவையிலும் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா உட்பட அமைச்சர்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்று ஆரம்பமான பொதுநலவாய 9வது இளைஞர் மாநாடு மற்றும் பொதுநலவாய மக்கள் மாநாடு ஆகிய இரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14ம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம உட்பட பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

10 மணி தொடக்கம் மதியம் ஒரு மணி வரையும், பிற்பகல் மூன்று மணி தொடக்கம், மாலை ஆறு மணிவரையும் இரண்டு கட்டங்களாக இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஓர் அங்க மாகவே இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித் துவப்படுத்தும் சகல சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இன்று இரவு எட்டு மணிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவினால் கொழும்பு கின்ஸ்பரி ஹோட்டலில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளான பொதுநலவாய இளைஞர் மாநாடு நேற்றுக்காலை ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனுபுற சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் பொதுநலவாய மக்கள் மன்ற மாநாடு காலி மற்றும் ஹிக்கடுவையிலும் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா உட்பட அமைச்சர்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்று ஆரம்பமான பொதுநலவாய 9வது இளைஞர் மாநாடு மற்றும் பொதுநலவாய மக்கள் மாநாடு ஆகிய இரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14ம் திகதி நிறைவடையவுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.