ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகள் ஆலோசகர் கலாநிதி அப்துல் காதர் மசூர் மொளலானா

2

(அஸ்ரப்.ஏ.சமத்)

மியண்மார் (பர்மாவில்) நாட்டில் வாழும் முஸ்லீம்களை அந்த நாட்டில் வாழும் பெரும்பாண்மையின பௌத்தர்கள் பச்சை பச்சையாக கொலைசெய்து குவிக்கின்றனர், இஸ்லாம் மதத்திற்கு அவர்கள் செய்யும் அதிதீவிர கொடுரச் சம்பவங்கள் அந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றமையை யாவரும் அறிந்த விடயம்.

ஆனால் நான் தனிப்பட்ட விஜயமொன்றையும் எனது வியாபார நோக்கமாகவும் மியண்மாhருக்குச் சென்றிருந்தேன். என்னைச் சந்தித்த மியண்மார் தூதுவர் எண்னை அழைத்துக் கொண்டு அந்த நாடடின் வெளிவிகார அமைச்சிரிடம் நிகழ்வொண்றில் அறிமுகப்படுத்தினார். அந்த நாட்டில் பௌத்த மத அபிவிருத்திற்காக 1 இலட்சம் அமேரிக்க டொலரை வழங்கும் படி பணித்திருந்தார். எனது வாக்குறுதியோ எண்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எதிர்பாரவிதமாக எங்களை அழைத்துக் கொண்டு அந்த அரசாங்கத்திடம் எண்ணைச் சுட்டிக்காட்டி நிதி வழங்குவார். எனத் தெரிவிப்பது எந்த விதத்தில் சார்த்தியமாகும்.

இந் நிதியை நான் வழங்கினால் முஸ்லீம் நாடுகளும் இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் எண்னை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள். முஸ்லீம்களை அழிப்பதற்கு நான் தொப்பியை அணிந்து கொண்டு அந்த நாட்டின் அரசிடம் அதுவும் பௌத்த மத அபிவிருத்திக்கு நிதி வழங்குவது எனது மனச்சாட்சிப்படி சரியாகுமா?

பொதுநலவாய கூட்டங்கள் நடந்து முடிந்ததும் நான் ஜனாதிபதியை சந்தித்து இவ் நிலைமைகளை விளக்கிக் கூறுவேன். அவரிடன் நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டிருக்கின்றேன். அத்துடன் மியண்மாரிரில் நடந்த விடயம் சம்பந்தமாக நிதி எண்னால் வழங்கமுடியாது பற்றி;யும் ஜனாதிபதியின் செயலாளாருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிகளையும் காண்பித்தார். நிதி வழங்கும் படி எனக்கு மியண்மார் தூதுவர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தையும் காண்பித்தார்.

எனது சமுகத்தையும் மதத்தையும் முஸ்லீம்களையும் கொன்று குவிக்கும் மியண்மாருக்கு நான் முஸ்லீமாக இருந்துகொண்டு ஏன் பணம் வழங்க வேண்டும். ? எனக் கேள்வி எழுப்பினார் அப்துல் காதர் மசூர் மௌலானா.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூலை 11ஆம் திகதி என்னுடன் இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ராசீக் சருக்கும் தணிப்பட்ட விடயமாகவும் எனது ஜெம் வியாபாரமாக மியண்மாருக்குச் சென்றிருந்தோம். இந்த நாட்டுக்கு நான் பண்நெடுங்காலமாக ஜெம் பிசினஸ் சம்பந்தமாக போகி வருவது வழக்கம்.

கடந்த மாதம் தூதுவர் 1இலட்சம் டொலர் இல்லாவிட்டாலும் 10ஆயிரம் அமேரிக்க டொலரையாவது வழங்கும்படி எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் அக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கும் அனுப்பியுள்ளார். இதுதான் அங்கு நடந்த விடயங்கள்

இன்று (13)ஆம் திகதி சவுதிஅரேபியாவிலிருந்து இலங்கை வந்தடைந்த மசூர் மொளானா அவரது கொழும்பு 7ல் உள்ள வீட்டில் வைத்து ஊடகவியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கிணார். அத்துடன் ஆதராபூர்வாக தனக்கு மியண்மார் தூதுவர் மாத்தறையைச் சோந்த முன்னாள் பிரதியமைச்சராக இருந்த எச். ஆர். பியசிறி, அவரின் தணிப்பட்ட பொதுசனத் தொடர்பு அதிகாரியாக கடமையாற்றும் இம்தியாசின் நேரடி தொலைத்தொடர்பு ஒலிப்பதிவு நாடா மற்றும் தூதுவர் அனுப்பிய கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளருக்கு தான் எழுதிய கடிதங்கள் மற்றும் மியண்மாரில் நடந்தவற்றையும் விரிவாக ஆதாரபூர்வாமாக ஊடகவியளாருக்கு காண்பித்தார்.

அரசியலில் எண்னை ஓரம் கட்டுவதற்கு முஸ்லீம் அமைச்சர் ஒருவர் முயற்சி

எனது முன்னேற்றத்திற்கும் அரசியலில் இருந்து எண்னை ஓரம் கட்டுவதற்கும் முஸ்லீம் அமைச்சர் ஒருவரும், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதியிடம் பல பிரயத்தணத்தைச் செய்துவருகின்றனர். இதனைச் சாட்டாக வைத்து என்ணைப்பற்றி பல குற்றச் சாட்டுக்களை ஊடகங்களுக்குச் சொல்லி வருகின்றனர். நான் யாணைத் தந்தம் கடத்தியதாகவும் ,மலேசியாவில் சந்தன மரம் கடத்தியதாகவும், பொய் வாந்திகளை பரப்புகின்றனர். நான் பரம்பரையாக ஜெம் விசினஸ் மற்றும் ஆடை உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்கின்றேன். அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் எனது ஜெம் கடைகள் உள்ளன. நான் இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டுத்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றல்ல.

நான் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதாரங்களுக்கு உதவி வருகின்றேன். அதற்காக நான் அல்லாஹ்விடமே நன்மையை எதிர்பாhக்கின்றேன். எனக்கு பட்டம் பதவிகளுக்காக நான் ஒருபோதும் துணை போகவில்லை. எமது சமுகம் மார்க்கம் குர்ஆண் எரிப்பு இவற்றுக்கு நான் உடன்பாடில்லை. அதற்காக எனது சொந்த நிதியை ஏண் வழங்க வேண்டும்.

இவ் விடயத்தையே நான் அந்த நாட்டு அரசிற்கு வாக்குறுதியளித்து ஜனாதிபதியின் ஆலோசகர் நிதி வழங்கவில்லையென தூதுவர் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்காகவே விசாரனை ஒன்று உள்ளது. எனத் மௌலானா தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இந்தியாவுக்குச் செரண்டிப் உரிமையாளர் சதக்காக ஹாஜியாரின் மகளின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அதே விமாணத்தில் எண்னுடன் அமைச்சர் பௌசி, ரவுப் ஹக்கீம் ஆகியோறும் வந்திருந்தனர். அதே அன்று பௌசியுடன் வந்து கட்டுநாயக்க விமாணத்தில் வந்திரங்கி அடுத்த மாறுதல் விமாணத்தில் முலம் 11.50க்கு ரியாத் பிளேட்டில் சென்டிருந்தேன். ஆனால் நான் வெளியில் வரவில்லையெனவும் எண்னை கட்டுநாயக்க விமாணநிலையத்தில் தடுத்து பிடித்துவிட்டார்கள் எனவும் கதை கட்டினார்கள். இதற்கெல்லாம் அல்லஹ்தான் பதில் கூற வேண்டும். எனவும் கலாநிதி அப்துல் காதர் மசூர் மொளலானா தெரிவித்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.