வடக்கில் மக்களை மீள்குடியேற்றி விட்டதாக ஆளுநர் கூறுவது சர்வதேசத்தை ஏமாற்றவே! மாவை குற்றச்சாட்டு

1810br

வலி. வடக்கு மக்கள் 23வருடங்கள் இடம்பெயர்ந்து முகாம்களிலும், தமிழகத்திலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கையில் வடக்கில் மக்களை முழுமையாக மீள்குடியேற்றி விட்டதாக ஆளுநர் கூறியிருக்கும் கருத்து மிக மோசமான பொய் என கூறியுள்ள மாவை சேனாதிராசா பா.உ. சர்வதேசத்தை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றப் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வலி,வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அவர் அங்கே உரையாற்றுகையில்,

23வருடங்களாக நாங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய நிலங்களில் அரசாங்கமும், இராணுவமும் மிகவும் சுகபோக வாழ்விi ன வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எங்கள் நிலங்களை எதேச்சாதிகாரமாக ஆக்கிரமிக்கப் பார்த்தார்கள். பின்ன ர் சட்டரீதியாக எங்கள் நிலங்களை கையகப்படுத்தப் பார்த்தார்கள்.

இன்று எங்கள் நிலங்களில் உள்ள வீடுகளை கண்மூடித்தனமாக அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் எங்கள் நிலங்களுக்கு திரும்பிச் செல்லவேண்டும். எங்கள் நிலங்களில் நாங்கள் வாழ்வதன் மூலமே நாம் தமிழ ர்கள் என்ற அடையாளத்தை தொடர்ந்தும் எம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அடிப்படை மனித வுரிமைகளை மதிக்காத, மனிதவுரிமைகளை மீறிய ஒரு நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவேதான் அதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். நாங்கள் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு எதிர்ப்புத் n தரிவிக்கவில்லை. பொதுநலவாய நாடுகளின் ஒழுக்கங்களை பின்பற்றாத, மனிதவுரிகளை மீறிய ஒரு நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெறக் கூடாது என்பதையே எதிர்க்கிறோம்.

இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அவையில் வந்து உரையாற்றிய ஒரு ஆளுநர் முன்னாள் இராணுவத் தளபதி, இன்று நாங்கள் அதிகளாக 23வருடங்கள் வாழ்வதற்கு காரணமானவர். சொல்கிறார் வடக்கில் மக்களை முழுமையாக குடியேற்றிவிட்டதாக. அவருக்கு அந்த சபையில் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும்.

அவருடைய அந்தக் கூற்றினை நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம். நாங்கள் நிலத்தை இழந்து அகதிகளாக வாழக்கின்றோம். அதற்கு யாழ்.மாவட்டத்திலேயே 17ற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்கள் சாட்சியா க இருக்கின்றன. மேலும் பல வழக்குகள் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத் தின் ஒரு பிரதிநிதி சர்வதேசத்தை ஏமாற்ற கூறும் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் பல அச்சுறுத்தல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் மத்தியில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டிருக்கின் றீர்கள். எதிர்வரும் 15ம், 16ம் திகதிகளில் இடம்பெறவுள்ள முக்கியமான போராட்டத்திலும் நீங்கள் அதிகளவில் கலந்து கொண்டு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும். அதன் மூலமே சர்வதேசத்தின் கவனத்தை நா ம் ஈர்க்க முடியும்.

இன்று எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். அதனை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே மக்கள் தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களில் கலந்துகொண்டு மு ழுமையாக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.