ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பொதுநலவாய அமைப்பின் தலைவரானார்!

mahinda-rajapaksa_10

(NH) பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் மாநாட்டை மிகக் கோலாகலமாக நடத்தியமைக்கு உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டெழுந்த ஒரு நாடு. ஆனால் சமாதானத்துடன் சுதந்திரமும் அதிக சுபீட்சமும் இங்கு தோன்றியுள்ளது. நாங்கள் அதனைப் பாராட்டவே இங்கு வந்துள்ளோமே தவிர தீர்ப்பு கூறுவதற்காக அல்ல என்று அவுஸ்தி ரேலிய பிரதமர் ரோனி அபோட் தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டை நடத்த முன்வந்ததன் மூலம் இலங்கை ஜனநாயக பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட சுதந்திரம் என்பவை தொடர்பான தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டியுள்ளது.

அத்துடன் அதன் பிரஜைகளுக்கு “நேற்றைய தினத்தைவிட இன்றும் இன்றைய தினத்தைவிட நாளையும் சிறப்பாக இருக்கும்” என்பதை மீள உறுதிசெய்துள்ளது என்றும் ரோனி அபோட் தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜனாதிபதி நடைபெறும் செய்தியாளர் மாநாட்டுடன் நிறைவடைகிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.