கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் இடமாற்றம்

ggf

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் உடனுக்கு அமுல்வரும் வகையில் இன்று வியாழக்கிழமை (21) இடமாற்றப்பட்டுள்ளார். மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்திற்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாமினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதி அதிபர் ஏ.கபூர் மீது பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார். இதனையடுத்து பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் அண்மையில் கிண்ணியா கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையே பிரதி அதிபர் ஏ.கபூர் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கிண்ணியா கல்வி வலயத்தில் தனது கடமைகளை இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அவர் தற்போது மருத்துவ விடுமுறையில் வீட்டில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதி அதிபர் கபூரின் இடமாற்ற அறிவிப்பினை அடுத்து கல்முனை ஸாஹிரா கல்லூரியின் ஆசிரிய சங்கத்தின் விசேட கூட்டமொன்று இன்று நண்பகல் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதி அதிபர் கபூரின் இடமாற்றத்திற்கு ஆசிர்கள் அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் குறித்த இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கல்லூரிக்காக சிறப்பாக செயற்படும் பிரதி அதிபர் ஏ.கபூரின் இடமாற்றத்தினை உடனடியாக ரத்துச் செய்யுமாறு அதிகாரிகளிடம் பழைய மாணவர்கள் சங்கமும் பகிரங்க வேண்டுகோள் விடுகின்றது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் இடமாற்றம்

  1. Vote -1 Vote +1Mohamed Irshath
    says:

    பிரதி அதிபர் ஏ.கபூர் sir இன் இடமாற்றம் உண்மையில் கண்டிக்கத்தக்க விடயம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.