இந்திய புலனாய்வுத் துறையினரின் அண்டப் புலுகல்கள்

zuhair1

(எம்.எம்.ஸுஹைர்- ஜனாதிபதி சட்டத்தரணி) 

அமெரிக்கா போலியான புலனாய்வு அறிக்கைகள் மற்றும் குற்றச் சாட்டுகள் ஊடாக மூன்றாம் உலக நாடுகளில் தலையீடு செய்வதற்கான  நிலமைகளை உருவாக்கிய பின்னர், எவ்விதம் இராணுவ தலையீடு செய்கின்றது என்பதற்கான பல்வேறு எடுத்துக் காட்டுகளை இதற்கு முந்தைய ஆக்கத்தில் சுட்டிக் காட்டினோம்.

விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்டு ஒரு மாதம் கழிவதற்கு முன்பாகவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ரகசிய அறிக்கையொன்றில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லக்ஷர் ஏ தைபா இலங்கையில் வசதி செய்யும் நிலையம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக குற்றம் சாட்டி இருந்ததையும் அதில் சுட்டிக் காட்டி இருந்தோம். விக்கிலீக்ஸினால் பகிரங்கப்படுத்தப்பட்ட அறிக்கை, குறித்த தகவல் இந்தியாவிற்கு பரிமாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.  இக்கதையின் போலித் தன்மையை இலகுவில் தோலுரிக்க முடிமான நாடு இலங்கைதான். ஆனால், இலங்கையுடன் அது பகிரப்பட்டதாக எத்தகவலும் இல்லை.

பெயர் குறிப்பிடப்படாத புலனாய்வு அதிகாரிகளை மூலமாகக் கொண்டு, இந்திய அறிக்கைகள் பலவும் தொடர்ந்து  வெளியாகின. மீடியாக்களில் பகிரங்கப்படுத்தப்பட்ட இவ்வறிக்கைகள், யாழ்ப்பாணத்திலும் ஒரு நிலையத்தை ஆரம்பித்து, தமிழ் நாட்டைத் தாக்குவதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும், தமிழ் நாட்டின் மீதான தாக்குதலுக்கு சிங்கள மீனவர்களும் பயன்படுத்தப்படலாம் எனவும் குற்றம்சாட்டின. இக்குற்றச் சாட்டுகள் எதுவித அடிப்படையும் இல்லாதவை என இலங்கைப் பாதுகாப்புத் துறையினரால் முழுமையாக மறுக்கப்பட்டன.

போலியான மாற்றும் ஆதாரமில்லாத, ‘புலனாய்வு அறிக்கைகள்’ என்ற பெயரிலான கதையாடல்கள் மூலமாக இலங்கையை மண்டியிடச் செய்து, இலங்கையைத் தண்டிக்கின்ற விரிந்த இலக்கை எய்துக் கொள்கின்ற விடயத்தில் முயற்சி அமெரிக்க மற்றும் இந்திய நலன்கள் ஒன்றோடொன்று ஒத்துப் போவது போன்ற ஒரு பிரக்ஞையே ஏற்படுகின்றது. குறிப்பாக வடக்குத் தமிழர்கள் தொடர்பிலான தனது அக்கறை என்று பெயரில் சொல்லிக் கொள்கின்ற இந்தியாவினதும், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் எழுத்தப்படாத அவாவைக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவினதும் வேறுபட்டவையாகத் தோன்றினாலும், இந்திய- அமெரிக்க புதிய கதையாடலான லக்ஷர் ஏ தைபா என்ற கட்டுக் கதை அவ்விடைவெளியை நிரப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

புத்தகாயா தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் மூலம் இலங்கைக்குக் கைமாற்றப்பட்ட  இந்திய புலனாய்வுத் துறையின் அண்டப் புலுகள் ஒன்று இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதற்கு மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். வட இந்தியா, பீஹாரில் இருக்கின்ற உலகப் புகழ்பெற்ற புத்தகாயா இவ்வருடம் ஜூலை 7ம் திகதி தாக்கப்பட்டது. தாக்குதல் இடம்பெற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும், தேசிய புலனாய்வு அமைப்பினால் (NIA) , குறித்த தாக்குதல்லுக்குப் பொறுப்பானவர்களின் அடையாளத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எவ்வாறாயினும், தாக்குதல் இடம்பெற்ற முதல் நாளில் இருந்தே, இந்தியன் முஜாஹிதீன்கள் என்ற அமைப்போ, அல்லது ரோஹிங்யா முஸ்லிம்களோதான் இதற்குப் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்ற செய்தி மிக ஆரம்பத்தில் இருந்தே மீடியாக்களில் பரப்பப்பட்டது. எவ்வாறாயினும், இம்மீடியாக்கள் மூலம் பரப்பப்படுகின்ற ஊகத்தை உறுதிப்படுத்துகின்ற வகையிலான எந்தவிதமான ஆதாரமும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பிற்குக் இதுவரை கிடைக்கவில்லை.

புத்த காயா தாக்குதல் இடம்பெற்று ஒரு நாள் கழித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன் இலங்கை வருகை தந்தார். முஸ்லிம் கடும்போக்குக் குழுவொன்று, இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக அவர் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இத்தகவலை ஜூலை 14, லங்கா தீப பத்திரிகை தனது முன் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. உண்மையில், இது ஓர் அப்பட்டமான பொய். இப்படியொரு அண்டப்புலுகளைக் கட்டவிழ்த்து விடுவது, இவ்வாறான உயர் பதவியொன்றில் இருக்கின்ற அதிகாரியொருவருக்கு அழகல்ல.

மேனன் கூறிய கூற்று, பல நாடுகளில் மதங்கள் இடையில் நிலவுகின்ற நல்லுறவையே குலைத்து விடுகின்றதொரு சீரியஸான கூற்று. மேனனுடைய கருத்து பர்மா மக்களுக்குக் கேட்டிருந்தால், ரோஹிங்யா முஸ்லிம்கள் பல இரவுகளைத் தூக்கமின்றிக் கழிக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கும். உண்மை என்னவென்றால், தாக்குதல் நடாத்தியவரின் அடையாளத்தை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். லங்காதீபவில் வெளியான செய்தி இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதும், புது டில்லியில் இருந்தோ, அல்லது கொழும்பில் இருந்தோ, மேனன் கூற்றுக்கு எதுவித மறுப்பும் வெளியிடப்படவில்லை. எனவே, இலங்கை ஊடகங்களில் வெளியான மேனனின் கூற்று, அவர் கூறிய அதே அசல் வடிவத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

மேனனின் அண்டப் புலுகளும், செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இருபத்து நான்கு மணித்தியாலத்திற்குள் பாகிஸ்தானை அமெரிக்கா அச்சுறுத்தியமையும் ஒரே மாதிரியானதுதான். ஆப்கான் மீதான யுத்தத்திற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கா விட்டால், பாகிஸ்தான் கற்காலத்தை நோக்கித் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் எச்சரிக்கப்படுகிறது. செப்டர்ம்பர் 11 தாக்குதல் தொடர்பில் எதுவித விசாரணையும் ஆரம்பிக்க முன்னர்தான் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ‘கற்கால அச்சுறுத்தல்’ விடுக்கப்பட்டதை ஜெனரல் பெர்விஷ் முஷாரப் அவரது ‘In the Line of Fire” என்ற நூலில் ஒப்புக் கொள்கிறார்.

இந்தியப் புலனாய்வுத் துறை மட்டங்களில் இப்படியான அண்டப் புழுகுகள் எக்கச்சக்கம். உதாரணமாக, இதை எடுத்துக் கொள்ளுங்கள். Central Bureau of Investigations (CBI)  இனுடைய முன்னாள் அதிகாரி சதீஷ் ஷர்மா. 2001 இல் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய அரசாங்கமே காரணம் என  அவர் குறிப்பிடுகிறார் (டைம்ஸ் ஒஃப் இந்தியா, 14/07/ 2013). பயங்கரவாதச் சட்டங்களைக் கடுமையாக்குவதற்கு சட்டவாக்கத்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த நாடகம் அரங்கேறியதாக அவர் குறிப்பிடுகிறார். மக்களின் சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து, அரசாங்கம் தனது அதிகாரத்தைக் கூட்டிக் கொள்வதற்கான ஒரு அண்டப் புலுகளே இது. சதீஷ் ஷர்மாவின் இக்குற்றச்சாட்டு பலமானதல்ல என வைத்துக் கொண்டாலும், இந்திய அதிகாரிகளால் இது வரை இது மறுக்கப்படவில்லை. உண்மை என்னவெனில் இந்தியாவின் மத்திய அமைச்சர்  தருகின்ற தகவலின் படி, இந்திய சிறைகளில் 51,206 முஸ்லிம்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக எதுவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் காலம் தள்ளி வருகின்றனர். பெருமாலும், தீவிர நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், ஜிஹாதிஸம், பயங்கரவாதம் போன்ற பல சொல்லாடல்கள் மேற்குலகினால், குறிப்பாக அமெரிக்காவினால் ஆப்கான், சோமாலியா, பாகிஸ்தான், லிபியா போன்ற இடங்களில் தமது தலையீட்டை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற துருப்புச் சீட்டுக்கள். ஐ.நா பாதுகாப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டாலே தவிர, அத்தகைய எந்தவொரு இராணுவ நகர்வும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையல்ல. செப்டம்பர் 11 தாக்குதல், ஐ.நா வினாலோ, அல்லது வேறு எந்தவொரு சர்வதேச அமைப்பினாலோ, அமெரிக்க இராணுவ செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்த முடியாத வகையிலான ‘உபகாரத்தை’யும் பங்கையும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளது.

அமெரிக்கா தலையீடு செய்ய விரும்புகின்ற இடங்களிலெல்லா இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி வெற்றிகரமாகவும், வினைத்திரனாகவும் வேலை செய்கின்றது. பொலிஸ், இராணுவ மற்றும் அரசியல் ஆளுமைகளுக்கு அமெரிக்க மற்றும் நேச நாடுகளுக்கு பயணம் செய்து, மூளைச் சலவை செய்யும் கருத்தரங்களை ஒழுங்கு செய்வதும் நோக்கமில்லாமல் அல்ல.

இப்பின்னணியில் காலத்திற்கு காலம் மேலெழுந்து வரக் கூடிய லக்ஷர் ஏ தைபா கதையாடலின் தொடர்ச்சியான தன்மையை ஆழமாக ஆய்வு செய்வது அவசியமாகும். நேரடித் தலையீட்டை ஊக்குவிப்பவர்கள், கிழக்கிலங்கையில் ஜிஹாதிகள் இருப்பதாகவோ, அல்லது மன்னாரின் அல்-கைதாவின் சில பிரிவுகள் செயற்படுவதாகவோ அடுத்து கதை விடலாம். ஒவ்வொரு குற்றச்சாட்டும் உன்னிப்பாக பரிசீலணை செய்யப்பட வேண்டிய தேவை இருப்பினும், அதற்கு மத்தியில் வெளிநாட்டு சக்திகளின் குழருபடிகளுக்கு நாம் இறையாகி விடவும் கூடாது. இக்குற்றச்சாட்டுக்கு நிச்சயமாக கூடுதல் துலங்கலைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், நாட்டின் ஒருமுறைப்பாடு விடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் உறுதியுடனும், தேசப்பற்றுடனுமே நடந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதமோ, பயங்கரவாதமோ என்றும் தலை தூக்கியதில்லை.

பாகிஸ்தானில் இடம்பெற்ற ‘தாலிபான்’ தாக்குதல்கள் பலவற்றின் பின்னணியில் அமெரிக்கா இருந்துள்ளதாக, அமெரிக்க சார்பு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஆஸிப் அலி சர்தாரி கூறியதாக Bob Woods  தனது ‘Obama Wars” என்கிற நூலில் குறிப்பிடுகிறார். பாகிஸ்தானில் ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்கி, பாகிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி, அதன் அணு ஆயுதங்களுக்கு ஆப்பு வைப்பதே அமெரிக்காவின் இலக்கு என அதில் சர்தாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். தாலிபான்களும் கூட இதே நோக்கத்திற்காக அமெரிக்காவினால் நிதி வழங்கப்படுவபவர்களாகவும் இருக்க முடியும். இதன் மூலம் மேற்கு ஊடகங்கள் வர்ணிப்பது போல், உலகின் ஒரே ‘இஸ்லாமியக் குண்டிடம்’ இருந்து இஸ்ரேலைப் பாதுகாக்கின்ற அமெரிக்க இலக்கிற்கு, தாலிபான்கள் ஒரு வேளை கருவியாகக் கூடப் பயன்படுத்தப்படலாம்.

சர்ச்சைக்குரிய அமெரிக்க தனியார் பாதுகாப்புக் குத்தகை  நிறுவனமான the black water நிறுவனமே ஆப்கான் பெண்கள், சிறார்களின் உயிர்களைப் பலியெடுத்த பல குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக, 25/10/2010 அன்று ஆப்கான் அதிபர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் குற்றம் சுமத்தி இருந்தார். இவ்வருட ஆரம்பத்தில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இக்கம்பனிக்கு, ஐந்து ஆண்டு கால குத்தகை ஒப்பந்தம் ஒன்றை வழங்கி இருந்தது. கர்ஸாயி, முல்லா ஒமரைப் பதவி கவிழ்த்த கையோடு, அமெரிக்காவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்ற வகையில், குறித்த அமெரிக்க நிறுவனத்தை பகிரங்கமாக விமர்சனம் செய்வதற்கு அவருக்கு ஓரளவு மனத் துணிவு இருந்திருக்கத்தான் வேண்டும்.

இவை அனைத்துமே எம்மை ஒரு முடிவை நோக்கியே அழைத்து வருகிறது. R2Pஅல்லது வேறு எந்த சர்வதேச சட்டம் குறித்தும் அலட்டிக் கொள்ளாமல், தனது தேவைக்காக எதனையும் மேற்கொள்ள அமெரிக்கா தயங்காது என்பதே அது. நாடுகளை ஆக்கிரமிப்பதானாலும், பிரஜைகளைக் கடத்துவதானாலும், முரண்பாடுகளையும், குழப்பங்களையும் தோற்றுவித்த பிறகு அரசாங்கங்களைக் கவிழ்ப்பதானாலும், எதிர்த்தரப்பை ஆயுத மயப்படுத்துவதனாலும், அல்லது வேறு எந்த விடயமானாலும் சரியே.!

இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், ஒவ்வொவ்வொரு தருணத்திலும் தில்லுமுல்லுகளை செய்பவர்கள்  தூய்மையானவர்களாகவும், நல்லவர்களாகவும் நோக்கப்பட வேண்டும் என்கிற நிலை இருப்பதுதான்.

எனவே, போலியாக உருவாக்கப்பட்ட அல் கைதா, தாலிபான், ஜிஹாதிஸ்டுகள், அடிப்படைவாதிகள் போன்றவர்களை இலங்கையில் இருந்து தூய்மையாக்குவது என்று கூறுவதை விட, இலங்கை விவகாரத்தில் தலையொடிவதற்கு வேறு என்ன நல்ல செயற்திட்டம் இருக்க முடியும்? அந்த செயற்பாட்டில் உள்ளக முரண்பாடுகளைத் தோற்றுவித்து, நாட்டில் ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்கி விட்டால், அடுத்த கட்டமாக ஆட்சி மாற்றம் ஒன்றை உருவாக்கி விடலாம். அப்பாவி முஸ்லிம்கள் சிலரின் இரத்தத்தை சிந்தி, ஈராக்கில் செய்தது போல், அல்கைதாவின் தளமாக இலங்கையை மாற்றிவிடலாம். பிறகு 1987 இல் இந்தியா செய்தது போல, நல்ல பிள்ளையாக ஒதுங்கிக் கொள்ளலாம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.