கல்முனை ஸாஹிரா கல்லூரி O/L தின விழா!

zck-ol-016

(ஆஷிப்)

(MM): கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி க.பொ.த.சாதாரண தர மாணவர் தின விழா இன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

பகுதித் தலைவர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் பிரதம அதிதியாகவும் , கல்லூரி பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா கௌரவ அதிதியாகவும் கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார், மாளிகைக்காடு அல்ஹுசைன் வித்தியாலய ஸ்தாபக அதிபர் ஏ.எம்.இப்றாஹிம் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் எதிர்வரும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் அதி திறமையான சித்தி பெற எதிர்பார்க்கும் 20 மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

zck-ol-016

zck-ol-005

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.