மாற்றுத் திறனாளிகளின் கலை விழா

Wesly-5-12-2013 (29)

(அஸ்லம்.எஸ்.மௌலானா) 

மாற்றுத் திறனாளிகளின் கலை விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை (05) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திரு.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாணத்துக்கான சர்வோதய இணைப்பாளர் வீ.ஜீவராஜ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகியோர்  கௌரவ அதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்காட்டும் வகையிலான பல்வேறு கலை, கலாசார  நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அதேவேளை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நிலையத்தில் கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது இக்கல்லூரியின் பழைய மாணவியான கல்முனை மாநகர முதல்வரின் துணைவியார் மிஸ்றியா என்.காரியப்பர் கல்லூரியின் வளர்ச்சிக்காக 25ஆயிரம் ரூபா நிதியை அன்பளிப்பு செய்தார்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், பெற்றோரோகள், மாணவர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து சிறப்பித்தனர்.

Wesly-5-12-2013 (8)

Wesly-5-12-2013 (18)

Wesly-5-12-2013 (13)

Wesly-5-12-2013 (11)

Wesly-5-12-2013 (20)

Wesly-5-12-2013 (29)

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.