இணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer

nhm-writer-free-tamil-typing-software

கணினியில் தமிழ் தட்டச்சிடப் பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் NHM Writer. New Horizon Media நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. நியூ ஹாரிசான் நிறுவனமானது ஒரு பதிப்பகம். உலகளவில் தமிழ் மட்டுமல்லாது, பிற மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் அளப்பரிய பணியைச் செய்யும் ஓர் நிறுவனம். 

தனது புத்தக தயாரிப்பு பணிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட அருமையான இம்மென்பொருளை, உலகத் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கி பெருமை சேர்த்திருக்கிறது.தற்பொழுது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளை மேன்படுத்தி புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இம்மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளார்கள்.

NHM Writer – மென்பொருள்:

இந்த மென்பொருள் மூலம் தமிழ் 99 முறையில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சிடலாம். போனோடோனிக் முறை என்று சொல்லக்கூடிய ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை தட்டச்சிடலாம்.அதாவது amma = அம்மா என தட்டச்சிடலாம்.

உங்களுக்குத் தெரிந்த பாமினி, வானவில் போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தியும் தமிழில் தட்டச்சிடலாம்.

பாமினி, தமிழ் தட்டச்சு, போன்ற உங்களுக்குத் தெரிந்த தமிழ் தட்டச்சு முறையிலேயே யுனிக்கோட் எழுத்துருக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

யுனிகோட் பற்றித்தெரிந்துகொள்ள இப்பதிவை வாசிக்கவும்.

1. யுனிகோட் எழுத்துருவுக்கு நன்றி.

தமிழ் மொழி மட்டுமல்ல.. இந்திய மொழிகளான Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Punjabi மற்றும் Telugu ஆகிய மொழிகளில் தட்டச்சிடலாம் என்பது சிறப்பான விடயம்.

Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera போன்ற அனைத்து உலவிகளிலும் இம்மென்பொருள் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுக்கிறது.

1MB அளவே கொண்ட இந்த மென்பொருள் விரைவாக தரவிறங்குகிறது. தரவிறங்கிய வேகத்திலேயே இதை கணினியில் நிறுவவும் செய்யலாம். மிகச்சிறந்த வேகத்தில் தொழிற்படுகிறது.

விண்டோஸ் சிடி இல்லாமலேயே Regional Language Support செய்யும் வசதி..

 Windows 2003/XP, Windows Vista, Windows 7 மற்றும் தற்பொழுது புதியதாக வெளிவந்துள்ள  Windows 8 ஆகிய இயங்குதளங்கள் கொண்ட கணிகளில் நன்றாக தொழிற்படுகிறது.

விண்டோஸ் டெக்ஸ்ட் சர்வீஸ் வசதி மூலம் MS Office ல் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்யலாம்.

DTP தொழில் செய்பவர்களுக்கு தொழில் ரீதியாக பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் இது.

கணினியில் தமிழில் தட்டச்சிட விரும்பும் புதியவர்களுக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.

NHM Writer மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டிhttp://software.nhm.in/products/writer

இந்த இணைப்பில் சென்று டவுன்லோட் என்று இருக்கும் இணைப்பைச் சுட்டி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

இதை கணினியில் இன்ஸ்டால் செய்வதும் மிகச் சுலபம்தாம்.இனி கணினியில் இனிய தமிழில் தட்டச்சிடுவது என்பது அனைவருக்குமே சாத்தியமான ஒன்று. கணினி பயன்படுத்துபவர்கள் அனைவரும் தமிழிலேயே தட்டச்சிட மென்பொருளை வடிவமைத்து வழங்கிய என்.எச்.எம். நிறுவனத்தாருக்கு நன்றி.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.