அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஹிலாரி ஒபாமா எதிர்வு கூறல்

obama_presser_080913

அண்மையில் அமெரிக்காவிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அதிபர் ஒபாமா தனக்கு அடுத்ததாக அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரும் திறன் படைத்தவர்கள் யார் என எதிர்வு கூறியுள்ளார்.

இதில் அவர் தனது ஆட்சியின் போது முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிங்டன், மற்றும் அமெரிக்காவின் தற்போதையத் துணை ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோர் அடுத்த ஜனாதிபதிப் பதவிக்கு வரக்கூடிய தகுதி உடையவர்கள் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் 66 வயதாகும் ஹிலாரி கிளிங்டனும் 71 வயதுடைய ஜோ பிடென் ஆகிய இருவருமே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்களின் திறமை பற்றியும் ஒபாமா தனித் தனியே கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார்.

‘மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உட்பட சிக்கலான பிரச்சினைகளில் மிகவும் உதவியாக இருக்கும் ஜோ பிடென் அமெரிக்க வரலாற்றில் சிறந்த துணை அதிபர் ஆவார். மேலும் ஹிலாரி கிளிங்டனைப் போல் மிகத் திறமையான வெளியுறவுத் துறை அமைச்சரையும் காண முடியாது!’ அதிபர் ஒபாமாவின் இக்கருத்துக்கள் மூலம் இவர்கள் இருவருமே அதிபர் பதவிக்குத் தகுதியான தனித்துவம் மிக்கவர்கள் என அரசியல் வல்லுனர்களால் நோக்கப் படுகின்றது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.