கல்முனை மாநகர ஒற்றுமை சதுக்க அபிவிருத்திப்பணிக்கு கொய்க்கா நிறுவனம் 3.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

kmc5

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பறினால் முன்மொழியப்பட்டுள்ள இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒற்றுமை சதுக்க அபிவிருத்தித் திட்டத்திற்கு கொய்க்கா நிறுவனம் முதற் கட்டமாக 3.3மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் அண்மையில் (05.12.2013) கைச்சாத்திடப்பட்டதுடன் 2 மில்லியன் ரூபா காசோலையினை ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபா குமார் தம்பி, முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் கையளித்தார்.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் தொழில் நுட்ப ரீதியான அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை வழங்கவும் ஆசிய மன்றம் உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆசிய மன்றத்தின் சார்பில் பணிப்பாளர் கலாநிதி கோபா குமார் தம்பி, பிரதிப் பணிப்பாளர் ஏ. சுபாகரன், நிகழ்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் ஆகயோருடன் மாநகர ஆணையாளர் ஜே. லியாகத்அலி, கணக்காளர் எல்.ரீ. சாலிதீன், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌசி ஆகியோர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைவாக மாநகர சபையின் நிதிப்பிரிவினை மேம்படுத்தவும், வரவு செலவுத்திட்ட தயாரிப்பினை உரிய முறையின் பிரகாரம் தயாரிப்பதற்ம், அரச-தனியார் பங்ககாண்மை அபிவிருத்திக்கும், பலதரப்பட்ட பங்குதுதார்களுடனான கலந்துரையாடலுக்கும், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பயிற்சிகள் வழங்குவதற்கும் ஆசிய மன்றம் இணக்கம் தெரிவித்தது.

மாநகர சபையின் வருமான முகாமைத்துவம் பற்றிய நிலைமை தொடர்பில் ஆசிய மன்ற பிரதிப் பணிப்பாளரும் சிரேஸ்ட தொழில்நுட்ப ஆலோசகருமான ஏ. சுபாகரினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவ்வறிக்கையின் பிரதிகளையும், ஆசிய மன்றத்தின் வெளியீடுகள் அடங்கிய தொகுப்பையும் முதல்வரிடம் கையளித்தார்.

kmc2

kmc4

kmc6

kmc7

kmc8

kmc9

kmc5

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.