சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை அதிபருக்கு அவசர இடமாற்றம்!

IMG_3498

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் உயர் கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் இப்பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களும் ஓய்வுபெற்ற அதிபர்களான ஐ.எல்.ஏ.மஜீத், ஏ.பீர் முஹம்மட், ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.றபீக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியேக செயலாளர் சி.எம்.ஏ.முனாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு- முக்கிய சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அப்பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது எனவும் அங்கு தற்போது அதிபராக கடமையாற்றுகின்ற எம்.சி.ஏ.கரீமை சாய்ந்தமருது பிரதேச கல்வி அதிகாரியாக நியமிப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் தான் தொடர்ந்தும் ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையின் அதிபராகவே கடமையாற்ற விரும்புவதாகவும் பிரதேச கல்வி அதிகாரியாக பொறுப்பேற்க விருப்பமில்லை எனவும் அதிபர் எம்.சி.ஏ.கரீம் இதன்போது உறுதியாகத் தெரிவித்தார்.

அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள எந்தவொரு பாடசாலையிலும் ஒரு அதிபர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் கடமையாற்ற அனுமதிப்பதில்லை என்றும் இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களை சம பங்கீடாக இணைத்து சகல பாடசாலைகளையும் சமாந்தர நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கும் அவசர திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கும் கிழக்கு மாகாண சபை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இதன்போது தெரிவித்தார்

அத்துடன் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய அதிபருக்கு இன்று வழங்கப்பட்டுள்ள அவசர இடமாற்றம் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.

பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் இப்பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத் தொகுதி ஒன்றை கிழக்கு மாகாண சபை மூலம் அமைப்பதற்காக மாகாண ஆளுநர், முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சர் போன்றோரிடம் தான் மிகவும் மண்டியிட்டு அங்கீகாரத்தை பெற்றுள்ள போதிலும் அது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளுக்கு குறித்த அதிபர் ஒத்துழைப்பு வழங்காமல் பொடுபோக்குடன் செயற்பட்டு வருகின்றார் என மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“இவ்வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை அமைப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ள எனது அழைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பாடசாலைக்கு மாகாண கல்வி அமைச்சர் வருகை தந்த போதிலும் இப்பாடசாலை அதிபர் அதற்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொண்டிருக்கவில்லை.

இதனால் 65 ஆசிரியர்கள் உள்ள இப்பாடசாலையில் 14 பேர் மட்டுமே இந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். பெற்றோர்கள் எவரும் வந்திருக்கவில்லை. இரண்டு நாள் அவகாசம் இருந்தும் கூட்ட ஏற்பாடுகள் அனைத்தும் சரியாக செய்யப்பட்டிருப்பதாக என்னிடம் அதிபர் கூறிய போதிலும் இக்கூட்டம் தோல்வியடையக் காரணம் என்ன?

அது அதிபரின் நிர்வாக முகாமைத்துவத்திலுள்ள பெரும் குறைபாடே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. இந்த அதிபர் மீது ஏற்கனவே பல முறைப்பாடுகள் என்னிடம் செய்யப்பட்டிருந்த போதிலும் நான் அது விடயத்தில் அவசரப்பட்டு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

ஆனால் நேற்று இந்த அதிபரின் பொடுபோக்கையும் பலவீனத்தையும் மாகாண கல்வி அமைச்சரும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரும் நேரடியாக கண்டறிந்ததன் பின்னரும் இவரை இங்கு அதிபராக வைத்திருப்பது இப்பாடசாலையின் எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமைந்து விடும் என்பதை கருத்திற் கொண்டே அவருக்கு இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளோம்” என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் விபரித்துக் கூறினார்.

இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர்கள் தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உறுதியளித்தனர்.

சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறான கலந்துரையாடலை மாதம் தோறும் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

IMG_3505

IMG_3498

IMG_3500

IMG_3506

IMG_3508

IMG_3510

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.