கல்முனை தமிழ் செயலகம்; தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத் தெறிவதற்கான சதி!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத்தெறிவதற்கான ஒரு சதித் திட்டமாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் முன்னெடுக்கப்படுகிறது என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகத்தினரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மு.கா. சார்பில் கலந்து கொண்டனர்.

அங்கு கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதற்கும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து ஆட்சி செய்வதற்குமான வாய்ப்பை இல்லாதொழிக்கும் ஒரு சதித் திட்டமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

அத்துடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக இரு சமூகங்களும் தமக்குள் ஒன்றுபட்டு குரல் எழுப்புவதற்கான சூழ்நிலையை நிரந்தரமாக இல்லாமல் செய்வதற்கான ஒரு தந்திரமாகவே கல்முனை விவகாரம் அரச மட்டத்தினால் கையாளப்படுகிறது என்பதை தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்முனை மாநகரப் பிரதேசத்தை இன ரீதியாக துண்டாடுவதன் மூலம் இப்பிரதேசத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்று பாரதூரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது” என்றும் கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பி.தயாரத்ன, பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, மட்டக்களப்பு மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பி முத்து ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் பிரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.