பொலிஸாரின் கெடுபிடிகள் காரணமாக கல்முனையில் வர்த்தகம் பாதிப்பு; முதல்வரிடம் முறையீடு!

Traders-05-12-2

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ், முஸ்லிம் வர்த்தகப் பிரதிநிதிகளும் அனைத்து பிரதேசங்களின் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அத்துடன் தற்போது பின்னடைந்து செல்கின்ற கல்முனை மாநகர வர்த்தக செயற்பாடுகளை சீர் செய்து- கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பொலிஸாரின் திட்டமிட்ட கெடுபிடிகள் காரணமாக கல்முனை மாநகர வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை உடனடியாகத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகளையும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ஏ.எச்.ஹலீம் ஜௌசி, சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத் தலைவ்வர் டாக்டர்  எம்.ஐ.எம்.ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Traders-05-12-1

Traders-05-12-2

Traders-05-12-4

Traders-05-12-5

Traders-05-12-6

Traders-05-12-7

Traders-05-12-8

Traders-05-12-11

Traders-05-12-12

Traders-05-12-13

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.