எம்.ஜே.எம். ரியாழ் கபூரியின் மறைவுக்கு கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அனுதாபம்!

276944-01-02.jpg.crop_display

காலம் சென்ற இலங்கையின் மூத்த மார்க்க அறிஞரான மௌலவி எம்.ஜே.எம். ரியாழ் கபூரியின் மறைவுக்கு கட்டாரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச மார்க்க ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச சன்மார்க்க அறிஞருமான கலாநிதி அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி தெரிவித்துள்ளார்.   

இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். முஜீப் கபூரி அன்னாரது மரணம் தொடர்பாக கட்டார் ஒன்றியத்துக்கு அனுப்பிய செய்தி கேட்டு இந்த இரங்கள் செய்தியை கலாநிதி அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி இணையத்தினூடாக வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தனது 85 ஆவது வயதில் நேற்று முன்தினம் மரணமடைந்த இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் செயலாளரும், மூத்த சன்மார்க்க அறிஞருமான மௌலவி எம்.ஜே.எம். ரியாழ் கபூரியின் மறைவையொட்டி தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் இலங்கை முஸ்லிம்களின் அகீதாவைப் பாதுகாக்கும் விடயத்திலும், முஸ்லிம்களின் விவகாரங்களிலும் மகத்தான பங்களிப்புச் செய்துள்ளார். முஸ்லிம்களின் ஒற்றுமை விடயத்திலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச சன்மார்க்க ஒன்றியம் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. மறைந்த ஷெய்க் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். அவரது குடும்பத்தினருக்கும் நாட்டிலுள்ள உலமாக்களுக்கும் அல்லாஹ் பொறுமையைக் கொடுக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் இறைவனிடம் வேண்டுகின்றோம் எனவும் கலாநிதி அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.