இந்திய சினிமாக்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் தடை

banned

பாகிஸ்தான் திரைப்பட தயாரிப்பாளர், முபாஷி? லுக்மான் என்பவர், லாகூர் உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்ய வேண்டும்’ என, அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சினிமா மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, பாகிஸ்தான் ‘டிவி’ கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை ஒளிபரப்ப, ‘டிவி’ சேனல்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து,பாகிஸ்தான், சேனல்களும், வெளிநாட்டு படங்களை ஒளிபரப்பி கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக, பாகிஸ்தான் ‘டிவி’ கட்டுப்பாட்டு ஆணையம், தன்னுடைய விளக்கத்தை, இன்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.