உலக முக்கிய நிகழ்வுகள் – டிசம்பர் – 13

World

1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.

1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1937 – சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் “கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.

1949 – இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.

1959 – மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.

1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.

1974 – மோல்ட்டா குடியரசானது.

1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1996 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.

2003 – முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 – முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

2006 – பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

இறப்புகள்

1557 – டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)

1944 – வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (பி. 1866)

1987 – நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)

2010 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்

சிறப்பு நாள்

மோல்ட்டா – குடியரசு நாள் ( 1974 )

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.