கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைப்பு

kmc

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை (23) சமர்ப்பிக்கப்படவிருந்த அதன் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களினால்  சமர்ப்பிக்கப்படவிருந்தது.

எனினும் மாநகர சபை சட்டத்தின் 212 ஆம் பிரிவின் பிரகாரம் குறித்த வரவு செலவுத் திட்டத்தின் நகல் முன்மொழிவுகள் அடங்கிய பிரதி மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும்  அது இம்மாதம் 21 ஆம் திகதியே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே அதனை இன்று சமர்ப்பிக்காமல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதென தீர்மானித்து- மாநகர ஆணையாளருக்கு முதல்வரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று நடைபெறவிருந்த கல்முனை மாநகர சபையின் விசேட சபை அமரவும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.