கல்முனை மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை

IMG_3848

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் இன்று மாலை சமர்ப்பிக்கப்படவிருந்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை தோன்றியது.

மாநகர சபையின் இன்றைய பட்ஜெட் அமர்வு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேயர் நிஸாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.

ஏழு மாநகர சபை உறுப்பினர்களின் எழுத்து மூல கோரிக்கையினை அடுத்தே இன்றைய கூட்டம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

எனினும் சபை மண்டபத்திற்கு பி.ப.2.30 மணியளவில் வருகை தந்த முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட சில மாநகர சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்திற்கு முன்னால் நின்று கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சிராஸ் மீராசாஹிபினால் மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகள் கிழித்து வீசப்பட்டதுடன் மேயருக்கு எதிராகவும் கோசம் எழுப்பினார். இதனால் மாநகர சபை வளாகத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

இதன்போது சில உறுப்பினர்களும் பொது மக்களும் சிராஸ் மீராசாஹிபுக்கு எதிராக கண்டன வார்த்தைகளை பிரயோகித்தனர்.

கல்முனை மாநகரத்தை கூறு போடுவதற்கு துணை போக வேண்டாம் எனவும் பிரதேச வாதத்தை தூண்ட வேண்டாம் எனவும் அவர்கள் சிராசுக்கு எதிராக் கோசம் எழுப்பினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிசார் விரைந்து வந்து மக்களைக் கலைத்து- சுமூக நிலையை ஏற்படுத்தினர்.

20131223-210444

20131223-210451

20131223-210505

IMG_3848

IMG_3857

20131223-210458

IMG_3852

IMG_3856

மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் விளக்கம்!

அதேவேளை கல்முனை மாநகர சபையில் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த அதன் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மாநகர சபை உறுப்பினர்களின் எழுத்து மூல கோரிக்கையினை அடுத்தே எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் ஒத்தி வைக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் கூறியதாவது;

“கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை மாலை என்னால் சமர்ப்பிக்கப்படவிருந்தது. அதற்கான தயார் நிலையிலேயே இன்று காலை மாநகர சபை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தேன்.

எனினும் மாநகர சபை சட்டத்தின் 212 ஆம் பிரிவின் பிரகாரம் குறித்த வரவு செலவுத் திட்டத்தின் நகல் முன்மொழிவுகள் அடங்கிய பிரதி மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது இம்மாதம் 21 ஆம் திகதியே உறுப்பினர்களுக்கு கிடைத்ததாக இன்று எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே அதனை இன்று சமர்ப்பிக்காமல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதென தீர்மானித்து- மாநகர ஆணையாளருக்கு அறிவித்தேன்.

பட்ஜெட் நகல் பிரதி எமக்கு உரிய காலப் பகுதியில் கிடைக்காததால் அதனை பரிசீலிப்பதற்கு தமக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என மாநகர சபை உறுப்பினர்கள் ஏழு பேர் என்னிடம் எழுத்து மூல கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இக்கோரிக்கையினை என்னால் தட்டிக் கழிக்க முடியாத சூழ்நிலையில் குறித்த பட்ஜெட் சமர்ப்பணத்தை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானித்தேன்” என முதல்வர் நிசாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.