கல்முனை மாநகர சபை பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர்களுடன் சுமூக தீர்வு!

SLMC-30-12-2013-3

(அஸ்லம் எஸ்.மௌலானா, பழுலுல்லாஹ் பர்ஹான்)

கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா  உறுப்பினர்கள் அனைவரும் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உறுதியளிப்பு கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை டிசம்பர்  மாதம் 31 திகதி இன்று செவ்வாய்க்கிழமை வெற்றிகறமாக நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உறுதியளித்தனர்.

30-12-2013 நேற்று திங்கட்கிழமை மாலை 5.மணி தொடக்கம் இரவு 8 மணிவரை நிந்தவூரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.எம்.ஹசனலியின் இல்லத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.எம்.ஹசனலி ,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோர்  கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  ,பிரதி கலாநிதி மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரை தனித்தனியாகவும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை கூட்டாகவும் அழைத்து இங்கு கலந்துரையாடினர்.

அதன் பின்னர; கட்சி தலைவரின் வேண்டுகோளின் படி தங்களுக்கான முரன்பாடுகளை கலைவதற்கும் ஒற்றுமையாக செயற்படுவதற்கும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் கல்முனை என கூறிவிட்டதோடு அந்த தளத்தை பழவீனமாக்குவதற்கு பல சக்திகள் மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன எனவும் இந்த சதி திட்டத்திற்கு ஆளாகாமல் நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டி இருக்கினறது என குறிப்பிட்ட அவர் அது மட்டுமன்றி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன முரன்பாடுகளை தோற்றுவிப்பதற்கான முயற்ச்சிகளும் தற்போது கட்டவிழ்த்தப்பட்டிருக்கின்றன.

அவற்றில் இருந்து இரண்டு சமூகங்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியும் இருக்கின்றது எனவும் இவ்வாறான மறைமுக சக்திகளின் ஊடுருவல்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும் எனவே மிகவும் அவதானத்துடனும்,புரிந்துணர்வுடனும் நாம் செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ரி.எம்.ஹசனலி தெரிவித்தார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல்,தவம்,நஸீர் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த துனைத் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீட்,அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

kal3

kal1

kal2

SLMC-30-12-2013-1

SLMC-30-12-2013-2

SLMC-30-12-2013-3

kal4

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.