வறுமைக் கோட்டில் வாழும் சிறார்களை தத்தெடுப்பதற்கென கெயார் ரஸ்ட் பவுண்டேசன் அங்குராப்பணம்

1

(அஸ்ரப். ஏ. சமத்)

ஆசியாவின் ஆச்சியரிமிக்க கொழும்பில் அதிசயத்தக்க வகையில் வருமைக்கோட்டின் கீழ் 60 வீதமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கொழும்பில் வறுமைக் கோட்டில் வாழும் முஸ்லீம் சிறார்களை தத்தெடுப்பதற்கென  கடந்த 4ம் திகதி கொழும்பு தபால் நிலைய கூட்ட மண்பத்தில் கெயார் ரஸ்ட் பவுண்டேசன் ஒன்று அங்குராப்பணம் செய்து வைக்கபட்டது. அதில் பிரதம அதிதியாக ரெயின்கோ நிறுவனத்தின் தலைவர் பௌஸ் ஹாஜியார் கலந்து கொண்டார்.

‘கொழும்பில் உள்ள முஸ்லிம்களது வறுமைக் கோட்டின் கீழ் ‘ என்ற தலைப்பில் ஜாமியா நளிமியா பிரதிப் பணிப்பாளர் அஷ் சேய்க் அகார் முகம்மத் விரிவாணதொரு உருக்கமானதும் நெஞ்சைத் தொடும் உரையொன்றை நிகழ்ததினார். இதில் மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, கொலநாவை போன்ற பகுதிகளில்pருந்து அழைக்கப்பட்ட சிறு வியாபரத்தில் ஈடுபடும் முஸ்லிம் வியாபாரிகள், சட்டத்தரணிகள், பள்ளிவசால் நிர்வாகிகள் என 250 பேர் கலந்து கொண்டனர்.

மாளிகாவத்தை, கொழும்பு பிரதேச மக்களது {முலை முடுக்குகளில் வாழ்க்கை நடாத்துதல,; கணவனை இழந்த பெண்கள், போதைவஸ்த்து பாவணையால் பாதிக்கபட்ட குடும்பங்கள,; பாதையோரங்களில் பிச்சை எடுத்தல், பள்ளிவாசலுக்கருகில் கை நீட்டுதல், மறறும் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாமல் உள்ள சில மாணவர்களது நேர்முகம் போன்ற காட்சிகள் திரையிடப்ட்டு இங்கு காண்பிக்கப்பட்டன.

அத்துடன் 10 அடி கொண்ட ஒரு அரையில் வாழ்ந்து வரும் தாய் தந்தை, குமர் பெண்பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் என அவர்களது வாழ்க்கை முறைமையும் இங்கு காட்சியாக காண்பிக்கப்பட்டது. இதனை ‘நொலேஜ் பொக்ஸ் ‘என்ற வீடியோ காட்சியை எடுத்திருந்தது.

இதன் பின்னர் 100 முஸ்லீம் பிள்ளைகளது கல்விக்காக உதவுவதற்காக அங்கு வருககை தந்திருந்த சில வியாhபாரிகள் முன்வந்தனர். அதற்காக ஒரு பிள்ளைக்கு மாதம் ஒன்றுக்கு 3ஆயிரம் ருபா வீதம் 100 பிள்ளைகளுக்க கல்விக்காக உதவுவதற்காக 25 க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் முன்வந்தனர். அதற்காக தமது பெயர்களையும் கெயார் ரஸ்ட் பண்டிடம் பதிவு செய்து கொண்டனர்.

விதவைகள், மற்றும் கணவனால் விட்டுச் சென்ற பெண்கள் தமது பிள்ளைகளைகளை பாடசாலைக்கு அனுப்பமுடியாமல் கொழும்பு வீதிகளில் நடையோர வியாபாரத்திற்கும் கூலித் தொழில்களுக்கும் அனுப்பி கிடைக்கும் ஊதியத்தில் தமது வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.

கொழும்பில் பெரும்பாலான பிரதேசமான மாளிகாவத்தை சிலேவ் ஜலண்ட் தெமட்டக்கொட, புதுக்கடை, கிராண்பாஸ் போன்ற பகுதிகளில் 100-400 சதுர அளவு கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்களது வறுமைகளை இந்த கொழும்பில் உள்ள வர்த்தக சமுகம் கண்டுகொல்லாமல் உள்ளன.

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அல்லது மத்ரசாவுக்கு அனுப்பி சிறந்த கல்வியைக் கற்கும் எதிர்கால சமுகம் ஒரு வண்முறையான ஒரு பயங்கர சமுகமாக மாறி வருகின்றது.

இதற்கு முதற் காரணம் வறுமை. எங்கு வறுமை இருக்கின்றதோ அங்கு வன்முறை இயற்கையாகவே இருக்கும். தனது கணவன் வெலிக்கடை சிறையில் போதைவஸ்த்து அல்லது கடத்த்ல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு 5-25 வருடகாலமாக சிறையில் இருப்போரின் குடும்ப நிலைகள் என்ன ? கொழும்பில் வர்த்தகம் முஸ்லீம்களின் கைகளில் உள்ளது எனச் சொல்லி வந்தனர் ஆனால் தற்போழுது 5-6 வீதமாணோரே வர்த்தகத்தில் ஓரளவு உள்ளனர்.

புதுக்கடையில் உள்ள வீதியில் அல்லது மாளிகாவத்தையில் உள்ள வீதியில் பெட்டிக்கடைகளை வைத்துக்கொண்டிருந்தாலும் அதுவும் வர்த்தக சமுகம் எனச் சொல்கின்றனர்.

ஆனால் கொட்டாஞ்சேனையில் கல்வியல் நிறுவணங்கள் நூற்றுக்கணக்கில் பெருகி வருகின்றன, ஆனால் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் சோற்றுக் கடைகள்தான் பெருகியுள்ளது.

கொழும்பில் வாழும் சமுகம் அடர்த்தியாகவும் தொடர்மாடி வீடுகளில் வாழும் சமுகம் மிகவும் வன்முறைக்கு உட்பட்ட சமுகமாக மாறிவருகின்றது. முவினங்களும் கலவனாக தொடர்மாடி வீடுகளில் வாழ்ந்து வரும் சமுகம் ஒழுக்கமின்மை, கல்வியறிவில் நாட்டமின்மை, மார்க்கமின்மை அமைதியின்மை கல்விகற்கக் கூடிய சூழலற்ற குடியிருப்புக்களாக காணப்படுகின்றன.

கடந்த வாரம் கொழும்பு 7 தெவட்டஹா பள்ளிவாசலில் நடைபெற்ற கெடியேற்ற வைபவத்தில் சொப்பிங்வேக்கில் ஒரு பிடி கந்தூரியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் பள்ளியை நிரம்பியிருந்து அச் சோற்றுக்காக மிகவும் அல்லோலப்பட்டனர். இதில் இருந்து ஒரு பிடிச்சோற்றுக்காக எத்தனை தாய்மார்கள் ஏங்கி நிற்கின்றனர். எனக் காணக்கூடியதாக உள்ளது.

1

2

3

4 5

6

7

8

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.