இலங்கையில் 195 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்கு காத்திருக்கின்றன; ஹலால் பேரவை அறிவிப்பு!

hac

நாட்டில் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஹலால் சான்றுறுதி பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹலால் சான்றுறுதி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை நிறுவனங்களின் 2007-7ஆம் பிரிவின் சட்டத்தின் கீழ் இப்பேரவை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 27 நாடுகளில் அங்கீகாரமும் பெற்றுள்ளது. இன்றைய உலகில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹலால் சான்றிதழ் முக்கியமானதாகும்.

இலங்கை நிறுவனங்கள் தமது உற்பத்திகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு முக்கிய சர்வதேச சான்றாக பின்பற்றப்படுகிறது. SLS மற்றும் ISO போன்ற சான்றுகளை போன்றே ஹலால் சான்றுறுதி பேரவையின் சான்றும் ஒரு சர்வதேச தரச் சான்றாகும்.

அத்துடன் எமது உள்விவகார நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் சர்வதேச நிறுவனத்தால் மதிப்பிடப்படுகின்றது. இத்தரச் சான்று உணவு, குடிபானம் மற்றும் பாவனை பொருட்கள் போன்றவற்றின் ஹலால் தரத்தை உறுதிப்படுத்தும் ஒரு விடயாகும்.

அத்துடன் இத்தரச் சான்றுடன் சமபந்தப்பட்ட விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளில் அனுபவம் வாய்ந்த தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப குழு ஹலால் சான்றுறுதி பேரவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எமது அனைத்து உள்விவகார செயற்பாடுகள் வெளிப்படையானதும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படக் கூடியதுமாகும். ஹலால் சான்றுறுதி பேரவையானது இலாபமற்ற இலங்கையையின் முக்கிய துறைசார்ந்தவர்களின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச தரங்களின் அடிப்படையில் மார்க்க வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்

இத்தரச்சான்றிதழ் விஞ்ஞான மற்றும் வர்த்தக ரீதியான தொடர்புகள் இருந்த போதிலும் இவை சமயம் மற்றும் கலாசாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. இது பாவனையாளர்களின் விருப்பத்திற்கு தேவையான ஹலால் உற்பத்திகளையும் சேவைகளையும் பெற்றுக் கொடுக்க வழி வகுக்கும்.

மேலும் இவை மூலம் இலங்கையர்கள் தமது உற்பத்திகளை அதிக பாவனையாளர்கள் கொண்ட சர்வதேச ஹலால் சந்தைக்கு அனுப்ப வழி கிடைக்கின்றது. இதன்மூலம் உலகில் வாழும் இரண்டு பில்லியனுக்கு அதிகமான முஸ்லிம்கள் ஹலால் உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும்.

உலக சந்தையில் ஹலால் ஏற்றுமதி சுமார் இரண்டு ரில்லின் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இது தொடர்பாக ஆய்வுகளை நடத்தும் ஏடீ கேர்ணி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பாவனையாளர்களின் தேவையாக இது அமைந்துள்ளது. 67 வீதம் உணவு, 22 வீதம் மருந்துப்பொருட்கள் மற்றும் 10 வீத அழகு சாதனப் பொருட்கள் இதில் அடங்குகின்றன.

நாட்டில் இந்த சான்றிதளுக்கு அதிக தேவை நிலவுகின்றது. உள்ளுர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பொருட்களை சந்தை படுத்ததும் சுமார் 195 இலங்கை நிறுவனங்கள் இந்த சான்றிதழை கோரியுள்ளன. நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை தற்போது துரித கதியில் மேற்கொண்டு வருகின்றோம்.

ஹலால் சான்றிதழ் ஆழமான முறையில் ஆய்வுக்குட்படுத்தியும் கண்காணிப்பட்டுமே வழங்கப்படுகின்றன. தேர்ச்சிபெற்ற உலமாக்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உணவு பரிசோதகர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இவற்றை கண்காணிக்கின்றனர்.

இந்த சான்றிதழை பெற வேண்டும் என எவர் மீதும் அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. ஹலால் சான்றுறுதி பேரவை நாட்டின் தேவையை கருதியே ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் எல்லா நிறுவனங்களும் அவசியம் ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.

நாங்கள் இலாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிறுவனம் அல்ல என்பதனால் எமது சேவைகள் இலவசமானது என்றும் கூற முடியாது. ஹலால் சான்றிதழ் படுத்தலினூடாக சிறந்த சேவைகளை வழங்க பல துறைசார்ந்தவர்கள் உட்பட பெரும் எண்ணிகையில் பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளோம். எனவே அதற்கான செலவீனங்களை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.