நிந்தவூர் பிரதேச சபை ஆளுங் கட்சி உறுப்பினர்கள் இருவர் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பு

SLMC logo 1_CI

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
நிந்தவூர் பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை எதிராக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் இணைப்புச் செயலாளரான எம்.எம்.அன்சார் மற்றும் பிரதேச உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரான எம்.ரி.ஹசன் அலியின் சகோதரும் இணைப்புச் செயலாளருமான எம்.ரி. ஜப்பார் அலி ஆகிய இருவருமே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துனர்.
இதேவேளை, நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் வேண்டுகோளிற்கினங்கவே இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிராக வாக்களித்த இரண்டு உறுப்பினர்களும் விவாதத்தின் போது தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளரான தனக்கு, உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை எனவும் பிரதி தவிசாளர் எம்.எம். அன்சார் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 2012ஆம் ஆண்டுக்கான நிந்தவூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 2 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>