ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் மோதல்; 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது

50617C40-NEMDD

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் ஏழு பயிலுனர் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரியின் உணவகத்தில் இரவு உணவு உண்டதன் பின்னர் கை கழுவச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்திற்கான பிரதான காரணம் காதல் விவகாரம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் காரணமாக கல்லூரியின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய பயிலுனர் ஆசிரியர்களை பத்தனை பொலிஸார் கைது செய்து, ஹற்றன் நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.