தலைமைத்துவ பயிற்சிபெறும் முஸ்லிம் பல்கலை மாணவிகளுக்கு பிரத்தியேக தங்குமிடம்: அமைச்சர் எஸ்.பி.

11-01-05--s_b

(மொஹொமட் ஆஸிக்)

பல்கலைகழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னனியுடன் பேசி முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி மடவளை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினரின் ஏற்பாட்டில் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் அனைத்து பல்கலைகழகங்களிலும் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோட்பதற்காகவும் இப்தார் செய்வதற்காகவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்  செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்இது விடயமாக நாட்டின் அனைத்து பல்கலைகழக உபவேந்தர்களுக்கும் தான் அறிவுறுத்தல் விடுக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>