சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்

82ce1676b3801af67fce44d4ad7d352e_L

சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் வாரத்தையொட்டி கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று

இனங்களையும் ஒன்றிணைத்த இனநல்லுறவுக்கான சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், கலாசார நிகழ்வுகளும் நேற்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 3.00மணிவரை மருதமுனையில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்;.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இருபது பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம், தமிழ், சிங்கள் சிரேஷ்ட பிரஜைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லீம் தமிழ் சிங்கள்  சிரேஷ்ட பிரஜைகளின் நடனம்,  நாடகம், பாட்டு கவிதை மற்றும் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட  அனைத்து சிரேஷ்ட பிரஜைகளுக்கும் பரிசுகளும்;சிற்றூண்டி மற்றும் மதிய போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே முதல் முறையாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சினாஸ் தமிழிலும்  யூ.எல்.எம்.பைசர் சிங்களத்திலும் நிகழ்சிகளைத்  தொகுத்து வழங்கினார்கள்.  மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களும> அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.