மஹிந்தவின் நிழலில் தீவிரவாதம்

Ravi_karunanayake2

கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் சமாதானமான, நிம்மதிமிக்க சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில், மஹிந்த ராஜபாக்ஷவின் நிழல் இவ்வாறான தீவிரவாதச் செயற்பாடுகள் நடைபெறுகின்றது. எனினும் நாங்கள் இதற்கு அஞ்சப்போவதில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீது இன்று முற்பகல் 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. குறித்த தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆதரவாளர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் ரவி கருநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் உள்ளநிலையில் இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கிக் கொடுப்பேன்.

எனவே ஜனநாயக பலத்தை முறியடிக்கச் செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் முயற்சிக்கு மக்கள் உதவிவழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.